பக்கம்:மதன கல்யாணி-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 109

அந்த நினைவை மாத்திரம் ஒதுக்கிவிடு. இந்த மாரமங்கலம் மைனரே, அவர் போகுமிடத்தில் ஏற்படும் பலவகையான துன்பங்களினால், நல்ல புத்தியடைந்து, ஒரு நொடியில் புதிய மனிதராக மாறிவிடலாம். நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுதல் அடைந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எது தான் நடக்கக் கூடாத அசாத்தியமான காரியம்?” என்று மிகுந்த அன்போடும் உருக்கமாகவும் கூற, அதைக் கேட்ட கண்மணியம்மாள் கலங்கிக் கண்ணிர் சொரிந்த வண்ணம், “இந்த உடம்பு அழிந்து சாம்ப லானால் கூட, அந்தச் சாம்பலைத் தீண்டுவதற்கும் இந்த மைனரை நான் விடமாட்டேன். அவருக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இதுவரை கிடையாது. இனியும் ஏற்படாதென்பது உறுதி என் மனதையும் உயிரையும் கொள்ளை கொண்ட சுந்தர புருஷர் எனக்குக் கிடைப்பாராகில், அதைவிட மேலான சாயுஜ்ய பதவி வேறொன்றும் இல்லை. அவர் கிடைக்காவிட்டால், வேறொருவர் தொட்டு இந்தக் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன் இந்த உடம்பு பிணமாகவே இருக்கும்” என்று தன்னை முற்றிலும் மறந்து ஆவேசங் கொண்டவள் போல மொழிந்தாள்.

அந்த மொழியைக் கேட்ட மதனகோபாலன், பெரிதும் திகைப் படைந்து, அவளால் காதலிக்கப்படும் பாக்கியம் பெற்ற புருஷ உத்தமன் யாவனாயிருப்பான் என்று சிந்தனை செய்தவனாய் ஐந்து நிமிஷ நேரம் பேசாதிருந்து, “அப்படியானால் ஈசுவர னுடைய கிருபை உனக்குப் பூரணமாக ஏற்படும். அந்தப் புருஷர் எந்த ஊரில் இருக்கிறாரோ?” என்றான்.

அதைக் கேட்ட கண்மணி பெரிதும் நாணம் அடைந்தாள் ஆனாலும் தனது ஆவேசத்தில் தன்னை முற்றிலும் மறந்தவளாய், “அந்தப் புருஷ சிங்கம் இங்கேதான் இருக்கிறார். அவரை அடையா விட்டால் நான் ஒரு நிமிஷமும் உயிர்வாழப் போகிறதில்லை என்பது பிரமாணமான வார்த்தை; ஆனால் அவருடைய மனம் என் விஷயத்தில் எப்படி இருக்கிறதோ என்பது தெரியவில்லை. யாராவது அதை அறிந்து சொல்வார்களானால், அந்தப் பேருதவியை நான் என்னுடைய உயிருள்ளவரையில் மறக்க

மாட்டேன்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/127&oldid=647023" இலிருந்து மீள்விக்கப்பட்டது