பக்கம்:மதன கல்யாணி-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 111

அபூர்வமாக இருக்கிறது. இது என்னுடைய பொல்லாத வேளையின் பலன் என்றே நினைக்கிறேன். நானாகிலும் கண்மணியம்மாளா கிலும் எவ்விதமான தவறையும் செய்யவில்லை என்பதை தாங்கள் நிச்சயமாக நம்பலாம். நான் வந்த போது, கண்மணி யம்மாள் அழுது கொண்டிருந்ததைக் கண்டேன்; அது முற்றிலும் புதுமையான காரியமாக இருந்தது ஆகையால், அதன் காரணம் என்னவென்று நான் கேட்டேன்; கண்மணியம்மாளுக்குத் தாங்கள் பார்த்திருச்கும் பர்த்தா துர்நடத்தை உடையவர் என்றும், அவரைக் கட்டிக்கொள்ளத் தனக்குப் பிரியமில்லை என்றும், ஆனால் தாங்கள் அவரையே கட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் சொல்ல, அதற்கு நான் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் தாங்கள் வந்தீர்கள். இதில், தாங்கள் என் மேல் கோபித்துக் கொள்ளும்படியான தவறு என்ன இருக்கிறது” என்று விநயமாகக் கூறினான்.

அதைக் கேட்ட மீனாகூஜியம்மாளது கோபம் முன்னிலும் அதிகரித்தது; அவன் அவனை முறைப்பாக நோக்கி, “ஒகோ: அப்படியா! அவள் அழுது கொண்டிருந்தால், இருந்துவிட்டுப் போகிறாள். அவளுக்குச் சமாதானம் சொல்ல உன்னை யார் அழைத்தது? உன்னுடைய வேலை வீணை கற்றுக் கொடுப்பது: அதை விட்டு அவளுடைய கலியாணப் பேச்சில் நீ ஏன் தலையிடு கிறாய்? நீங்கள் பேசியதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டாயா? இவள் வேறொருவன் மேல் ஆசை வைத்திருப்பதாகச் சொன்னாள். அவனுடைய பெயரைச் சொன்னால், அந்த விஷயத்தில் உன்னாலான உதவியைச் செய்வ தாக நீசொன்னாயே; அதன் கருத்தென்ன? எங்களுடைய மனதுக்கு விரோதமாக இவளுடைய கலியாணத்தை நிறைவேற்றி வைக்க நீ உடந்தையாக இருப்பாய் என்றல்லவா ஏற்படுகிறது எங்களுக்கு விரோதமான ஒரு விஷயத்தைச் செய்யக்கூடிய மனிதனாகிய உன்னை இந்த பங்களாவிலேயே சேர்ப்பது பிசகு. உங்கள் இருவரையும் தனியாகப் பேசவிட்டதே முதல் தவறு. இந்த விஷயத்தைப் பற்றி உன்னோடு அதிகமாக வாக்குவாதம் செய்ய எனக்கு இஷ்ட்மில்லை. நீ போகலாம். உன்னுடைய சமாதானம் எனக்குத் தேவை இல்லை,” என்று கண்டிப்பாகக் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/129&oldid=647027" இலிருந்து மீள்விக்கப்பட்டது