பக்கம்:மதன கல்யாணி-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 மதன கல்யாணி

அதைக் கேட்ட மதனகோபாலன் அவமானத்தில் குன்றிப் போனான். ஆனாலும், பணிவாக ஏதோ மறுமொழி கூற வாயைத் திறந்தான். அதற்குள், துரைராஜா மிகவும் மூர்க்கமாக அவனை முறைத்துப் பார்த்து, “அடே போ ஒய் வெளியிலே; உன்னுடைய சமாதானம் யாருக்கு வேண்டும்; மறுபேச்சுப் பேசாமல் மரியாதை யாகப் போகிறாயா? அல்லது, வேலைக்காரனைக் கூப்பிடட்டுமா?” என்று மகிவும் அதட்டிக் கூற, அதைக் கேட்ட மதனகோபாலன் சகிக்க இயலாத சஞ்சலம் அடைந்தவனாய் வாசலை நோக்கி நடந்த வண்ணம் புன்னகையும் துன்பமும் பிரகாசித்த முகத்தோடு, “சரி: உங்களிஷ்டம். இதோ போய்விடுகிறேன். கோபிக்க வேண்டாம். என்னுடைய சொந்தத் தங்கையைப் போல மிகவும் வாத்சல்யத் தோடு இதுவரையில் நான் பாராட்டி வந்த குழந்தை துயரப்பட்டு அழுகிறதைக் கண்டு சகியாமல், அதை சமாதானப்படுத்துவதற்கு ஏதோ எனக்குத் தெரிந்த இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லி விட்டேன். அதில் ஏதாகிலும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு விஷயம் நான் வெளியிட விரும்புகிறேன். இந்த விசனத்தைப் பொறுக்க மாட்டாமல் குழந்தை கிணற்றில் குளத்தில் விழுந்து தன்னுடைய உயிருக்கே தீங்கு செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கிற தாகத் தெரிகிறது. குழந்தையைச் சமாதானப் படுத்துங்கள்” என்று அந்தரங்கமான அபிமானத்தோடு கூறிவிட்டு அப்பால் போய் மெத்தையிலிருந்து கீழே இறங்கி பங்களாவிற்கு வெளியில் போய்விட்டான்.

கீழே தாழ்த்தப்பட்ட சிரத்தோடு சித்திரப் பதுமை போல அசைவற்று அதுவரையில் உட்கார்ந்திருந்த கண்மணியம்மாளை மீனாகூஜியம்மாள் கோபத்தோடு பார்த்து, “ஓகோ கிணற்றில் விழப் போகிறாயோ! நான் உன் விஷயத்தில் பட்டபாடுகளுக்கெல்லாம் இதுதான் நீ செய்யும் பதிலுதவி போலிருக்கிறது! நமக்கு அதிகமான ஐவேஜி இல்லையே, குழந்தை நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டு அமோகமாய் வாழ வேண்டுமே என்று நினைத்து நான் இந்த ஏற்பாட்டைச் செய்தால், அதைவிட்டு ஆள் ஆழகாய் இருக்கிறான் என்று வீணை வித்துவானைக் கட்டிக் கொள்ள ஆசைப்படு கிறாயோ? உன் மனதில் இருப்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/130&oldid=647031" இலிருந்து மீள்விக்கப்பட்டது