பக்கம்:மதன கல்யாணி-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 44. மதன கல்யாணி

அவன் தனது மற்ற உணர்வுகளை எல்லாம் இழந்தவனாய், அத்தனை துன்பங்களும் தனக்கே சம்பவிக்கப் பெற்றவன் போல, சகிக்க இயலாத வேதனையில் ஆழ்ந்தவனாய்த் தத்தளித்துத் தளர்வடைந்து நெடுநேரம் நடந்து கொண்டே இருந்தான். விலை மதிப்பற்ற நிதிக்குவியலை ஒத்த அந்தப் பெண்மணி, தனது விரக்தியில், தற்கொலை புரிந்து கொள்ளுவாளோ என்ற அச்சமும், தான் மறுபடி அவளிடம் நெருங்கி, அவளது மனதை மாற்ற முடியாமல் போனதே என்ற கவலையும் எழுந்து அவனைப் பெரிதும் உலப்பியது. பிற்பகல் நான்கு மணிக்குதான் மாரமங்கலம் அரண்மனையில் வீணை கற்றுக் கொடுக்கப் போக வேண்டும் என்பதையும் அவன் மறந்து தெருத்தெருவாய் அலைய, கடைசியாக அவனது சுய உணர்வும் நல்ல அறிவும் படிப்படி யாகத் திரும்பித் தெளிவடையவே, அவன் அப்போது எவ்வளவு மணியாயிற்று என்பதை உடனே கவனித்தான். மாரமங்கலம் அரண்மனைப் புதல்வியர் தனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் ஆதலால், தான் போகாமலே நின்றுவிடின், அவர்களுக்குத் தன்மீது அருவருப்பும் கோபமும் உண்டாகும் என்ற நினைவு தோன்றியது. அப்போது மாலை ஐந்து மணி சமயம் ஆதலால், தான் விரைவாக நடந்து சென்று, ஐந்தரை மணிக்காகிலும் அவ்விடத்தை அடைய நினைத்து வேகமாக நடந்து மாரமங்கலம் பங்களாவை அடைந்து உள்ளே நுழைந்தான். இதற்கு முன் நான்காவது அதிகாரத்தில் கூறப்பட்ட படி கல்யாணி யம்மாளிடம் கோபித்துக் கொண்டு மைனர் சென்ற பின் அவள் தனது புதல்வியருடனும், பொன்னம்மாளுடனும் சம்பாவித்த பிறகு, புதல்வியர் தங்களது விடுதிகளுக்குள் நுழைந்த காலத்தில் மதனகோபாலன் உள்ளே தோன்றினான். ஒவ்வொரு நாளும் அவன் வந்ததைக் கண்டவுடனே அங்கிருந்த வேலைக்காரருள் ஒருவன் விரைவாக உள்ளே சென்று இளங் குமரிகளுக்கும், கல்யாணியம்மாளுக்கும் அவனது வரவைத் தெரிவிப்பது வழக்கம். உடனே பெண்களும் தாயும் வீணை கற்றுக் கொள்வதற் காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒர் அழகான மண்டபத்திற்குச் செல்வார்கள். புதல்வியர் இரத்தின கம்பளம் விரிக்கப்பெற்ற தரையில் வீணைகளோடு உட்கார்ந்து கொள்ளுவார்கள். அதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/132&oldid=647034" இலிருந்து மீள்விக்கப்பட்டது