பக்கம்:மதன கல்யாணி-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 117

அவன் மகா அற்புதமான அழகு வாய்ந்த யெளவனப் புருஷன் என்பது முன்னரே சொல்லப் பட்டிருக்கிறது. அழகு வழிந்த முகமும், அதில், மிக்க விசாலமாகப் பரவி, பளபளப்பும், தெளிவும், புத்தி கூர்மையும் கொண்டிருந்த சுந்தர விழிகளும், கபடமற்ற பார்வையும், மாதுரிய குணங்களும், மிருதுவான இனிய வதனமும், குற்றமற்ற ஒழுக்கமும், பிறரிடம் காட்டும் இயற்கையான அன்பும் இன்னம் அவனிடம் காணப்பட்ட எண்ணிக்கையற்ற பல கவர்ச்சிகளும் ஒன்றுகூடி மகா கொடிய விலங்குகளான கரடி புலி சிங்கம் முதலிய ஜந்துக்களும் அவனிடம் வசியமாய், தாசாதுதாசனாக அவனது காலடியில் வீழ்ந்து சரணாகதி அடையச் செய்வனவாக இருந்தன என்றால், அவைகளைக் கண்ட கல்யாணியம்மாளது மனம் சலனப்படாமல் இருக்குமா? - நிற்க, அவன் தனது புதல்வியருக்கு வீணை கற்றுக் கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்தே மதனகோபாலனிடம் கல்யாணியம் மாளுக்கு இயற்கையான ஒருவித வாத்சல்யம் தோன்றி அது நாளுக்கு நாள் நொடிக்கு நொடி ஊற்றெடுத்துப் பொங்கி எழுந்து கொண்டே வந்தது. அவனும் தனது குமாரத்திகளும் ஒரே கடைந் தெடுக்கப் பெற்ற மூன்று பதுமைகள் போலவும், மூன்று சுவர்க்க லோகங்கள் போலவும் அழகே வடிவாக உட்கார்ந்திருந்த காலங்களில், கல்யாணியம்மாள் மதனகோபாலனது வதனத்தை யும் பெண்களது வதனங்களையும் ஒத்திட்டுப் பார்த்த வண்ணம் கரைகடந்த மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்து அந்த ஆராய்ச்சி யிலேயே தனது மனம் லயப்பட விடுத்திருப்பாள். அவ்வாறு ஒவ்வொரு நாளும் அவனது வதனத்தைப் பார்க்கப் பார்க்க அவன் பேரழகு அவளுக்கு அதிகரித்துக் கொண்டு போவதாகத் தோன்றிய தன்றி, அது எத்தனை வருஷங்கள் ஆனாலும் தெவிட்டாத கண் காட்சியாகவும் விருந்தாகவும் இருந்தது; நிற்க, அவனது முகத்திற்கும் தனது பெண்களது முகங்களுக்கும், நெருங்கிய ஒற்றுமை காணப்பட்டமையால், அம்மூவரையும் புதிதாகக் காண்போர், அவர்கள் ஒரு தாயின் வயிற்றில் ஜனித்த குழந்தைகள் என்றே நிச்சயமாக எண்ணிக்கொள்ளுவர். அந்த ஒற்றுமையைக் காணக்காண கல்யாணியம்மாளது மனம் பாகாய் இளகியது; உள்ளம் பூரித்தது. தேகம் புளகாங்கிதம் அடைந்தது. “ஐயோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/135&oldid=647039" இலிருந்து மீள்விக்கப்பட்டது