பக்கம்:மதன கல்யாணி-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 123

ஆனால், வீணை மண்டபத்தில் இருந்து வெளிப்பட்ட மதன கோபாலன் இரண்டு மூன்று விடுதிகளைக் கடந்து அப்பால் போகும் முன்; அவன் அந்த மூன்று பெண்டீரைப் பற்றிய நினைவையும் மறந்து விட்டான். தான் மாரமங்கலத்தாரது மாளிகையில் செல்வதையும் மறந்து போனான்; கண்மணியம் மாளது நினைவும், அவளது சுந்தர ரூபமும் அவனது மனதில் எழுந்து அவனது கவனத்தை முற்றிலும் கவர்ந்து கொண்டன; கண்மணியம்மாள் விம்மி விம்மி அழுவது போலவும், தான் அதனைத் தேற்றுவது போலவும், அந்தச் சமயத்தில் மீனாகூரி யம்மாளும், துரைராஜாவும் திடீரெனத் தோன்றி, தன்னை துவசித்து பங்களாவில் இருந்து தன்னை வெளிப்படுத்துவது போலவும், அவனது அகக்கண்ணில் ஒரு தோற்றம் உண்டாயிற்று; அவன் அதே நினைவிலும் கவலையிலும் தனது முழு கவனத்தையும் செலுத்தி மெய்மறந்தவனாய்ச் செல்லவே, அவனது கால்கள் பழக்கத்தினால் அவனை நடத்திக் கொண்டு சென்றன. அதுகாறும் நிரம்பவும் நற்குணத்தோடு ஒழுகிய மீனாகூஜியம்மாளும் துரை ராஜாவும் அன்று முரட்டு மனிதர் போலத் தன்னிடத்தில் நடந்து கொண்டது அவனுக்கு நிரம்பவும் வியப்பாக இருந்தது; அவர்கள் கண்மணி யம்மாளிடத்திலும் அது போலவே முரட்டுத் தனமாக நடந்து, தங்களது இச்சைப்படியே கலியாணத்தை நடத்தப் பிடிவாதமாக முயன்றால் கண்மணியம்மாள் தனது உயிருக்கு ஏதேனும் தீங்கிழைத்துக் கொள்வாளோ என்ற கவலையே பெருங் கவலையாக எழுந்து அவனது மனத்தை வதைக்கத் தொடங்கியது; நிற்க, தான் வேறொரு புருஷனை மணந்து கொள்ள ஆசைப் படுவதாக அவள் வெளியிட்டதும் அவனுக்கு மனங் கொள்ள ஆச்சரியமாக இருந்தது; ஒரு விஷயத்தையும் அறியாதவள் போல அதுகாறும் காணப்பட்ட அந்தப் பெண்மணி தன் மனதில் முக்கியமான அத்தனை பெருத்த விஷயங்களை மறைத்து அடக்கி வைத்துக் கொண்டிருந்தது. அவனுக்கு விந்தையிலும் அதிவிந்தை யாக இருந்தது; அவளது மனத்தையும், காதலையும் கொள்ளை கொண்ட அந்தப் புண்ணிய புருஷன் யாவனோ என்ற ஐயமும் இடையிடையில் அவனது மனத்தை உலப்ப ஆரம்பித்தது; மற்ற எந்த யெளவன மடந்தையிடத்தும் ஏற்படாத அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/141&oldid=647052" இலிருந்து மீள்விக்கப்பட்டது