பக்கம்:மதன கல்யாணி-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 -: மதன கல்யாணி

அதிகமான பிரேமையும் விலக்க ஒண்ணாத கவர்ச்சியும் அவளொருத்தி இடத்திலேயே தன் மனதில் ஏற்பட்டிருந்ததை நினைத்து நினைத்து அவன் தன் மனதைத் தானே கண்டித்துக் கொண்டான். தனது தாழ்ந்த நிலைமைக்கும் யோக்கியதைக்கும் எட்டாத பெருத்த அந்தஸ்தில் உள்ள அந்தப் பெண்மணியிடத்தில் அவ்வளவு வலுவாகத் தனது மனம் சென்றது பெருத்த தவறென நினைத்து, அவன் அதை வேறு விஷயத்தில் செலுத்த முயன்றான். ஆனால் அந்த முயற்சியால், அவளது நினைவும் வடிவமும், முன்னிலும் அதிக உயரமாக வேரூன்றி ஆழப்பதிந்து நின்றன. அந்த நிலைமையில் மதன கோபாலன் தத்தளித்துத் தளர்வடைந்து தனது நினைவு முழுதையும் வேறிடத்தில் வைத்தவனாய்ச் செல்லவே வழியை விட்டு, அவன் பங்களாவின் நடுப்பக்கத் திற்குச் செல்லும் வழியிலே திரும்பி உள்ளே போய்க் கொண்டிருந் தான். அப்படி இரண்டு மூன்று மண்டபங்களையும் விடுதிகளையும் கடந்து, அவன் கடைசியில் காணப்பட்டதும், மிகவும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான ஒர் அழகான அந்தப்புரத்திற்குள் நுழைந்து சிறிது துரம் செல்லவே, கீழே போடப்பட்டிருந்த இரத்தின கம்பளத்தின் மிருதுவான நீண்ட உரோமத்தின் மீது அவனது கால்கள் பதிய, அது புதிய இடம் என்ற உணர்வு அவனுக்கு அப்போதே ஏற்பட்டது. உடனே அவனது சுய நினைவும் திரும்பியது; தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்பவன் போல அவன் தனது கண்களை நன்றாகத் திறந்து சிரத்தை உயர்த்தி இருபக்கங்களையும் நோக்க, இந்திர விமானம் போன்ற ஒரு சிறந்த சயனமாளிகையில் தான் இருந்ததைக் கண்டு கொண்டான். உடனே திகைப்பினாலும் அச்சத்தினாலும் அவனது தேகம் நடுங்கியது. அன்னியர் நுழையக்கூடாத அந்தரங்கமான ஓர் அந்தப்புரத்திற்குள் தான் தவறுதலாக நுழைந்துவிட்டதாக அவன் உணர்ந்து கொள்ளவே, அவனது மனமும் தேகமும் சயிக்க இயலாத தவிப்பை அடைந்தன; வந்த வழியாகவே திரும்பி விரைவில் நடந்து அந்த அந்தப்புரத்திற்கு வெளியில் போய்விட நினைத்து அவன் மெதுவாகத் திரும்பவே, அதற்குச் சிறிது துரத்தில் பெருத்த பஞ்சு மெத்தைகள் பரப்பிய உன்னதமான ஒரு தந்தக் கட்டிலில் படுத்திருந்த கல்யாணியம்மாள், எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/142&oldid=647053" இலிருந்து மீள்விக்கப்பட்டது