பக்கம்:மதன கல்யாணி-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மதன கல்யாணி

“ஒகோ! நீ சொல்வது கன்றுக் குட்டிக்குப் புல்பிடுங்க தென்னை மரத்தில் ஏறின கதையாக இருக்கிறதே எங்கே? இப்படி சமீபத்தில் வந்து என் முகத்தைப் பார்த்து பேசு; பெண் பிள்ளையைப் போல முகத்தைக் கீழே போட்டுக் கொண்டு ஒருகாத துரத்தில் இருந்து ஏதோக கட்டுக்கதை சொல்லிவிட்டு ஓடிப்போக நினைக்கிறாயா? வா இப்படி” என்று அன்பாகவும் அழுத்தமாகவும் கூறினாள்; அவள் உபயோகித்த சொற்களின் கொடுமையை, அவளது அன்பான குரல் நயப்படுத்தி, குற்றமற்றதாகக் காண்பித்தது. உடனே மதனகோபாலன் சிறிது துணிவடைந்தவனாய், அந்தக் கட்டிலிற்கருகில் தயங்கித் தயங்கி நடந்து, அவளிருந்த இடத்திற்கு மூன்று கஜ தூரத்திற்கு அப்பால் நிரம்ப மரியாதையாக நின்று “அம்மணி! நான் சொன்னது உண்மையான சங்கதி! நான் பிறந்த முதல் இந்தகூடிணம் வரையில், எந்த விஷயத்திலும்கூட பொய் என்பதையே பேசியறியேன். நான் சொன்னதே வாஸ்தவம்!” என்றான். அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “ஒகோ! அப்படியா! இத்தனை வருஷமாகப் பொய் சொல்லியதில்லை ஆகையால், அது எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இப்போது சிறிதாக ஒரு பொய் சொல்லிப் பார்க்கிறாய் போலிருக்கிறது!” என்று புன்சிரிப்பாக மறுமொழி கூறினாள். அது கோபமாகப் பேசியதைப் போலவின்றி சந்தோஷத்தினால் அவனோடு பரிகாசம் செய்தது போல இருந்தது; அதைக் கேட்ட மதனகோபாலன் மறுமொழி கூற அறியாதவனாய் சிறிது தத்தளித்த பின்னர் பணிவாகவும் உண்மையான விசனத்தோடும்,


இது என்னுடைய பொல்லாத காலம் என்றே நினைக்கிறேன். இந்தத் தவறை நான் என்னுடைய மன தறியச் செய்தவனன்று என்பதை நான் எப்படி ருஜூப்படுத்தப் போகிறேன்? இவ்வளவு நீண்ட காலமாக தாங்கள் என்னுடைய நடத்தைகளையும் குணத்தையும் கவனித்திருப்பீர்கள்; அந்த நன்னடத்தையை ஆதாரமாக வைத்துக் கொண்டு தாங்கள் என்னுண்டய வார்த்தையை நம்ப வேண்டும். நான் வழி தவறி வந்ததாக நினைக்காவிடில், இந்த அந்தப்புரத்தில் நான் நுழை வதற்கு வேறே என்ன காரணம் இருக்கப் போகிறது? தாங்களே சொல்லுங்கள்” என்று மிகவும் சஞ்சலத்தோடு கூறவே, அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கலக்கென்று நகைத்தவளாய், “நன்றாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/144&oldid=647055" இலிருந்து மீள்விக்கப்பட்டது