பக்கம்:மதன கல்யாணி-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 மதன கல்யாணி

அழகைக் காண்பதனாலும், அருமையான சங்கீதத்தைக் கேட்பத னாலும் உணர்வு கலங்கி இன்பம் அடைந்தவளாய், வீணை மண்டபத்தில் இருக்க மாட்டாமல் சங்கடப்பட்டுக் கடைசியில் எழுந்து ஓடிவந்து தனது பஞ்சணையில் படுத்து, அவள் வேதனை யுற்றிருந்தவள் ஆதலால், அவனால் ஏற்பட்ட மனப்புண்ணிற்கு அவனது வருகையே பெருத்த அமிர்தசஞ்சீவி போல இருந்தது. அவன் அதுகாறும் அவளோடு பேசிய போதெல்லாம் அவளது புதல்வியர் இருவரும், அவளோடு கூடவே இருந்தனர்; அப்போது அவர்கள் இல்லாமல், தானும் அவனும் தனிமையில் இருந்தது அவளுக்கு ஒரு பெருத்த சுமையும் தொல்லையும் ஒழிந்தது போல இருந்தது. ஆதலால் அப்போது அவனை உட்கார வைத்து அவனோடு சிறிது நேரமாகிலும் பேசி ஆனந்தமடைய வேண்டும் என்னும் விலக்க ஒண்ணாத அவாவினால் பெரிதும் தூண்டப் பட்டவளாய், கல்யாணியம்மாள் மிக உருக்கமான குரல் கொண்டும் அன்பு வெள்ளத்தைக் கண்பார்வையினால் ஒடவிட்டும், உட்கார்ந்து கொள்ளும்படி அவனை உபசரித்தாள். அதற்கு முன் தனது பெண்களின் முன்னிலையில் மிகவும் கம்பீரமான பார்வையாகப் பார்த்து அதிகமான அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இரண்டொரு வார்த்தையில் சுருக்கமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்தச் சீமாட்டி, தான் செய்த பெருந்தவறைப் பற்றி, அதிகமாகக் கோபியாமல் அவ்வளவு எளிதில் தன்னை விட்டதன்றி வரம்பு கடந்த பட்சமும் உருக்கமும் காட்டி தன்னை உபசரித்து உட்காரச் சொன்னதைக் கண்ட மதனகோபாலன் வியப்பும் திகைப்பும் அடைந்தவனாய், அவள் அன்று அவ்வளவு துரம் மாறுபட்டு நடந்ததன் காரணம் என்ன என்பதை அறிய மாட்டாமல் நிலை கலங்கி சிறிது நேரம் ஸ்தம்பமாக நின்றான். நீண்ட காலமாகத் தன்னிடத்தில் இருந்து சென்று அவளது மனதை சல்லடைக் கண்களாகத் துளைத்து வந்த தனது மோகனாஸ்திரங் களின் மகிமையை அவன் சிறிதும் உணராதவன் ஆதலால், அவனுக்கு அது நிரம்பவும் புதுமையாக இருந்ததன்றி, அவனது மனதில் பலவகைப்பட்ட சந்தேகங்கள் தோன்றி உலப்ப ஆரம்பித்தன. அவன் தனது முகத்தையே கூர்ந்து நோக்கிய கல்யாணியம்மாளது இளகிய பெருத்த விழிகளை நிமிர்ந்து பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/146&oldid=649585" இலிருந்து மீள்விக்கப்பட்டது