பக்கம்:மதன கல்யாணி-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 131

ஆதலால், அதற்கு ஒத்ததாகவே கல்யாணியம்மாளது. தோற்றமும் சந்தேகிக்கத்தக்கதாய் இருந்ததைக் காண், அவள் துர்நடத்தை உள்ளவள் என்றும் தன் விஷயத்தில் அவள் ஏதோ தவறான விருப்பம் வைத்திருக்கிறாள் என்றும் மதனகோபாலன் நினைத்து விட்டான். ஆதலால் அவனது நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பினது நிலைமை போல இருந்தது. அந்த இடத்தில் ஒரு நொடி நேரம் நிற்பதும் தவறாகத் தோன்றியது. அவ்விடத்தை விட்டு உடனே போய் விடுவதும் பிசகாய் இருந்தது. ஆதலால் மதனகோபாலன் தனது மனத் துன்பங்களை எல்லாம் ஒருவாறாக அடக்கிக் கொண்டு கல்யாணியம்மாளை நோக்கி, “அம்மணி மகா ஏழையும் கீழ்வகுப்பைச் சேர்ந்தவனுமான என் விஷயத்தில் தாங்கள் இவ்வளவு துரம் அபிமானம் வைத்து நான் அறிந்தோ அறியாமலோ செய்த பிழையைப் பாராட்டாமல் என்னை மன்னித்ததும் அன்றி, சோபாவில் உட்கார்ந்து கொள்ளும்படி எனக்கு உபசாரமும் செய்வதைக் காண, எனக்கு மகா சந்தோஷம் உண்டாகிறது. ஆனால் என்னுடைய உடம்பு அசெளக்கியமாக இருக்கிறது என்று நான் முன்னாகவே விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறேன். அதனாலும், இப்போது நான் செய்த தவறி னாலும், என்னுடைய மனம் சரியான நிலைமையில் இல்லை. நான் உடனே என்னுடைய ஜாகைக்குப் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. நான் போவதற்கு, தயவு செய்து உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று நிரம்ப மரியாதை யாகவும் பணிவாகவும் கூறின்ான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாளது மனம் பதறியது. ஒரு தாய் தனது குழந்தையிடத்தில் எவ்விதமான வாத்சல்யமும், பிரேமையும் கொள்வாளோ, அவ்விதமாக அவள் மதனகோபாலனை மதித் திருந்தவள் ஆதலால், அவனது உடம்பின் அசெளக்கியத்தை -...} . “ ** மிகுந் இரக்கமும், ஆதாரமும்

சுரந்தன. அவள் அவனுக்கருகில் நெருங்கி நின்ற் வண்ணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/149&oldid=649588" இலிருந்து மீள்விக்கப்பட்டது