பக்கம்:மதன கல்யாணி-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மதன கல்யாணி

அசெளக்கியம் ஏற்படுமன்றி, சிரமபரிகாரம் கொஞ்சமும் உண்டாகாதே, ஆகையால் நீ ஒரு காரியம் செய்; இந்த சோபாவில் உட்கார்ந்து, அரை நாழிகை சாய்ந்து கொண்டிரு. அதற்குள் சுடச்சுட கொஞ்சம் காப்பி வரவழைக்கிறேன். அதை சாப்பிடு; அதற்குள் பெட்டி வண்டியைப் பூட்டச் செய்கிறேன். அதில் ஏறிக்கொண்டு நீ வீட்டுக்குப் போய்ச் சேரலாம்; அப்படியே செய்; நான் சொல்வதைக் கேள்; வெட்கப்படாதே. இது பெரிய மனிதர் வீடாயிற்றே என்று லஜ்ஜைப் படாதே; இதை உன்னுடைய சொந்த விடென்றே பாவித்துக் கொள். நான் உன்னை வித்தியாச மாகவே நினைக்கவில்லை. நீ வேறு, என்னுடைய குழந்தைகள் வேறென்றே நான் எண்ணவில்லை. உண்மையைச் சொல்லு கிறேன். உன்னிடத்தில் எனக்கு இருக்கும் ஆசை என் குழந்தை களிடத்திலே கூட இல்லை. ஆனால் நான் அதை இதுவரையில் உன்னிடம் காட்டிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படாமல் இருந்தது; இன்றுதான் ஏற்பட்டது. ஏன் பேசாமல் நிற்கிறாய்? நீ நிற்க நிற்க, என்னுடைய உயிரே தள்ளாடுகிறது; வா; உட்கார்ந்து கொள்” என்று கல்லும் கரையும்படி அவ்வளவு உருக்கமாகக் கூறித் தனது பற்களைத் திறந்து நயமாக வேண்டிக் கொண்டாள். அவளது நடத்தையைக் குறித்து மதனகோபாலன் தவறான அபிப்பிராயம் வைத்திருந்தவன் ஆதலால், அவள் தன்னை ஒரு புத்திரன் போல மதித்து அவ்வாறு உபசிக்கிறாள் என்பதை அவன் சிறிதும் நம்பாமல், அவள் ஏதோ கபடமான எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டே தன்னை இருக்கச் சொல்லுகிறாள் என்று நினைத்தான். ஆனால் அவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், கீழே குனிந்த வண்ணம், “அடாடா எனக்கும் இவ்வளவு உபசாரமா இது, ஒரு நாயை முத்துப் பல்லக்கில் ஏற்றி வைப்பது போல இருக்கிறதே! நான் கேவலம் அனாதை; தங்களுடைய சேவகனுக்குச் சமமானவன். எனக்கு உடம்பு அசெளக்கியமாக இருப்பதனாலேயே நான் என்னுடைய யோக்கியதையையும் உண்மையான நிலைமையையும் மறந்து; தங்களுக்குச் சரிசமானமாக சோடாவில் உட்கார்ந்து கொள்ளலாமா! அது தகாது; அப்படி நான் செய்வேனாகில், என்னைவிட அதிகமான யோக்கியனும், அகம்பாவம் கொண்டவனும் வேறே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/150&oldid=649590" இலிருந்து மீள்விக்கப்பட்டது