பக்கம்:மதன கல்யாணி-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133

எவனும் இருக்க மாட்டான். வேண்டாம்; நான் நின்று கொண்டே பேசுகிறேன்; தங்களுக்கு என்ன விஷயங்கள் கேட்க வேண்டுமோ அவைகளைக் கேளுங்கள்; நான் நின்றபடியே பதில் சொல்லி விட்டு, தங்களிடம் விடை பெற்றுக் கொண்டு என்னுடைய ஜாகைக்குப் போகிறேன்” என்று உண்மையான பணிவோடு கூறி சிறிது நகர்ந்து கொண்டான்.

அவனது குணத்தழகையும் சொல்லழகையும் பணிவையும் புத்திசாலித்தனத்தையும் கண்டு பூரிப்படைந்த கல்யாணியம்மாள் பெருமகிழ்ச்சி கொண்டு தனது அதரங்களை மலர்த்தி அழகாக நகைத்து “ஆகா! என்ன குணம் பிள்ளையிருந்தாலும் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! என்னுடைய பிள்ளையும் இருக்கிறானே அணிப்பிள்ளை தென்னம்பிள்ளை; அடே மதன கோபாலா! விலையில்லா மாணிக்கக்கட்டி என்பதும் உனக்குத் தான் தகும். இந்த உலகத்தில் நான் இதுவரையில் கண்ட மனிதர்களில் எல்லாம், நீ ஒருவனே முதலாவது பீடத்தில் வைக்கத் தகுந்தவன். நீ ஒர் ஏழையின் வயிற்றில் பிறந்திருக்கலாம். அதனால் உன்னுடைய உண்மையான மேம்பாடுகள் போய்விடுமா? உனக்கு மரியாதைகள் ஏற்படக் கூடாதா? சேற்றுக்கும் தவளை களுக்கும் நடுவில் மலர்ந்திருப்பதனால், தாமரைப் புஷ்பத்துக்கு ஏதேனும் இழிவு ஏற்படுமா அது சர்வேசுவரனுடைய முடியில் போய் தங்கும் யோக்கியதையும் மகிமையும் உடையதாய் இருக்கிறதல்லவா. ஆகையால், உன்னிடத்தில் எவ்வளவு அபாரமான சிறப்புகளும் மேன்மைகளும் இருக்கின்றன என்பதை நீ அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்; அறிந்து கொண்டிருந்தால் “நாய்க்கு முத்துப் பல்லக்கு மரியாதையா” என்பது போன்ற தகாத வார்த்தைகளை நீ உபயோகித்திருக்கவே மாட்டாய். இந்த உலகத்தில் எந்த அம்சத்திலாகிலும் உன்னைக் காட்டிலும் சிறந்த மனிதன் வேறே இருக்கிறான் என்று யாராவது சொல்ல முடியுமா? அழகை எடுத்துக் கொண்டால், உன்னை மன்மதனுடைய அவதாரம் என்றே சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் உள்ள ஆண் பெண்களின் அழகை எல்லாம் இணை நிற்காது. குணத்தை எடுத்துக் கொண்டாலோ, எல்லோரும் உன்னிடத்தில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நடத்தையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/151&oldid=649591" இலிருந்து மீள்விக்கப்பட்டது