பக்கம்:மதன கல்யாணி-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 மதன கல்யாணி

பதிவிரதாஸ்திரீகளின் நடத்தையைக் காட்டிலும் அதிக மனோ ரம்மியமானதாகவும் மாசற்றதாகவும் இருக்கிறது. வித்தையிலோ கலைவாணியே ஆணுருக் கொண்டு வந்தது போல இருக்கிறாய்; ஒவ்வொரு அம்சத்திலும் உத்தமமான அமைப்பைப் பெற்றிருக்கும் உனக்கு மரியாதை செய்யாவிட்டால், பிறகு நாங்கள் வேறே யாருக்குத்தான் மரியாதை செய்யப் போகிறோம்? கேவலம் பிறப்பையும் பணத்தையும், மூட உலகமே பாராட்டுமன்றி விவேகிகளாய் இருப்பவர் அவற்றை மதிக்க மாட்டார்கள். மற்றவர் உன்னை எப்படி மதித்தாலும் மதிக்கட்டும்; நான் உன்னைக் கண்ட முதல், உன்னைச் சாதாரணமாகவே மதிக்கவில்லை. நீ சகலமான நன்மைகளும் பூர்த்தியாக நிறைந்த ஒரு நிதிக்குவியல் என்றே நான் உன்னை நினைப்பதன்றி, நமக்கு இப்படிப்பட்ட குழந்தை ஒன்று இருக்கக்கூடாதா என்று எத்தனை தடவைகளில் நினைத்திருப்பேன் தெரியுமா! நீ கேவலம் தாழ்ந்தவன் என்றும், மகா பெரிய மனிதர்களான எங்களுக்கு நெடுந்துாரத்துக்கப்பால் கைகட்டி வாய் புதைத்து நிற்கத் தகுந்தவன் என்றும், நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் நான் உன்னை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா என்னுடைய இருதய கமலமாகிய கோவிலில் உன்னை ஒரு தெய்வம் போல வைத்து சதாகாலமும் பெருமைபடுத்தி வருகிறேன். இன்று வீணை மண்டபத்தில் இருந்து இடை நடுவில் எழுந்து வந்தபின் உன் நினைவே நினைவாகக் கொண்டு நான் படுத்திருந்ததன்றி வேறே எந்த நினைவையும் கொள்ளவில்லை. நான் உன்னை என்னுடைய உயிருக்குயிராகவும், குழந்தைகளுக்கெல்லாம் மகா அருமையான குழந்தையாகவும் மதித்து வந்திருக்கிறேன்; மற்ற எவர் மேலும் ஏற்படாத அவ்வளவு அதிகமான ஒரு வாத்சல்யமும் பகமும் உன் விஷயத்தில் இத்தனை மாத காலமாக ஏற்பட்டு நிமிஷத்துக்கு நிமிஷம் அது பெருகிக் கொண்டே இருக்கிறது. என்னுடைய மனதை அவ்வளவு தூரம் சின்னா பின்னமாக்கிவிட்ட மனிதனாகிய நீ என்னை யாரோ ஒர் அன்னிய ஸ்திரி என்றும், மரியாதைக்கு அருகமுள்ள ஜெமீந்தாரிணி என்றும் நினைத்து, முகமறியாதவன் போல நடந்து கொள்வது சகிக்க (lpiq-il iss துன்பமாக இருக்கிறது. நான் சொல்வதைக் கேள்; இன்று நீ அரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/152&oldid=649592" இலிருந்து மீள்விக்கப்பட்டது