பக்கம்:மதன கல்யாணி-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - மதன கல்யாணி

கொண்டான். அவனது சொல்லழகோடு பல்லழகும் ஒன்றுகூடி, கல்யாணியம்மாளை வசியப்படுத்தி விட்டன. அவன் புன்னகை செய்த போது அவனது வலது கண்ணம் அழகாகக் குழிந்ததும், அவனது பெருத்த கண்கள் மலர்ந்ததும் அவளது உயிரைக் கொள்ளை கொண்டன. அவள் அதற்கு முன் அவனுக்கு அவவளவு சமீபத்தில் நெருங்கி அவனது அழகைக் கண்டவள் அன்று ஆதலால் அப்போது அவள் தன்னை முற்றிலும் மறந்து ஒருவகையான ஆவேசங் கொண்டவளாய், “சரி, நீ இப்போது போவதைப் பற்றி எனக்கு எவ்வித ஆக்ஷேபனையும் இல்லை. ஆனால் உன்னிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்துவிட்டுப் போய்விடு; அப்படிச் செய்யா விடில் நான் உன்னை இன்று வெளியில் விடப்போகிறதில்லை; இந்த திரேகத்தினால் உன்னை நான் அப்படியே கட்டி எடுத்து மார்போடு அனைத்து, ஒரே ஒரு முத்தம் கொடுத்துக் கீழே விட்டு விடுகிறேன்; அதன் பிறகு நான் உன்னை வருத்துவதில்லை. நீ உடனே உன்னுடைய ஜாகைக்குப் போய்விடலாம்” என்று கூறிய வண்ணம், கரைகடந்த ஆசையோடும் ஆவலோடும் மனக் கொந் தளிப்போடும் தனது கைகளையும் மார்பையும் விரித்துக் கொண்டு அவன் மீது பாய்ந்தாள்.

அதைக் கண்ட மதனகோபாலன் கதிகலங்கிப் போய் முற்றிலும் திக்பிரமை கொண்டவனாய், அவ்விடத்தைவிட்டு சரேலென்று நாலைந்தடி தூரம் பின்னால் விசையாகப் பாய்ந்த வண்ணம் “அம்மணி வேண்டாம், வேண்டாம்; அந்தக் காரியத்துக்கு மாத்திரம் நான் அருகமற்றவன்; இதனால் என்னுடைய உயிர் போவதாய் இருந்தாலும் இப்படிப்பட்ட பாபகரமான காரியத்துக்கு நான் உடன்பட மாட்டேன். இதுவரையில் தாங்கள் என்மேல் சாதாரணமான அபிமானம் வைத்தீர்கள் என்று நினைத்து நான் இவ்வளவு நேரம் தங்களோடு பேசிக் கொண்டிருந்தேன்; தாங்கள் இவ்விதமான நோக்கம் வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தால், இந்நேரம் நான் போயிருப்பேன்” என்று கூற, கல்யாணியம்மாள் அவனது சொல்லைக் காதில் வாங்காமல் முன்னிலும் அதிகரித்த வெறிகொண்டவளாய் “நில் நில்; போக வேண்டாம்; உன் அப்பன் மேல் ஆணை நீ போகவே கூடாது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/156&oldid=649596" இலிருந்து மீள்விக்கப்பட்டது