பக்கம்:மதன கல்யாணி-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 139

என்னை ஒரு தரம் கட்டிக்கொள்ளாமல் போவாயானால், இப்போது என் உயிர் போய்விடும்; அதற்கு நீதான் உத்தரவாதியா வாய்; நில், நில், ஏன் இப்படி ஒடுகிறாய்? நான் உன்னை ஏதேனும் துன்மார்க்கமான நினைவோடு கூப்பிட்டால் நீ ஓட வேண்டும்; உன்னை ஒரு குழந்தை போல நினைத்து உன்மேல் பிரியப்படு கிறேன்; எங்கே வாசற்படியண்டை ஒடுகிறாய்? அடே! இப்படித் தான் செய்வாயா? நாளைக்கு நீ என்னுடைய முகத்தில் விழிக்க வேண்டாமா? ஐயோ! என் உடம்பு பறக்கிறதடா அடே ஓடாதே ஓடாதே” என்று கெஞ்சி மன்றாடி அவனைத் துரத்த, அவன் “நில்லுங்கள், நில்லுங்கள், வேண்டாம் வேண்டாம்; இந்தக் காரியத்துக்கு மாத்திரம் நான் இணங்கவே மாட்டேன்; இது நமக்குத் தகாது” என்று சொல்லிக் கொண்டே வாசற்படியண்டை போய் விட்டான். அவனுக்கு ஒரு கஜ தூரத்திற்கு அருகில் கல்யாணி யம்மாள் அவனைப் பின்பற்றித் தொடர்ந்து ஒடிக் கொண்டிருந் தாள். அவர்கள் இருவரும், நன்றாக வாய்விட்டுப் பேசிக் கொண்டே ஓடினார்கள் ஆதலால், அவர்களது வாக்குவாதம் பக்கத்து அறையில் எவரேனும் இருப்பார்களானால், அவர்களது செவிகளுக்கு நன்றாக எட்டி இருக்கலாம். அவ்வளவு வெளிப் படையான குரலில் ஆக்ஷேபனை சமாதானம் செய்து கொண்டு அவர்கள் சேவலும் பெட்டையும் போல, முன்னும் பின்னுமாக வாசற்படியண்டை ஒடிய சமயத்தில், அந்த வாசலிற்கு எதிர்ப் பக்கத்து வாசலில் “என்ன அது? என்ன அது? யார் அவன்? ஏன் அவனை துரத்துகிறீர்கள்?” என்ற குரல் உண்டாயிற்று. அதைக் கேட்ட கல்யாணியம்மாள் இடியோசையைக் கேட்ட நாகமென அஞ்சி நடுங்கி திடுக்கிட்டுத் திரும்பி அந்த ஓசை உண்டான கதவு பக்கம் நோக்கி, அங்கே துரைஸானியம்மாளும், கோமளவல்லியும் பெரிதும் திகைப்பும் வியப்பும் கொண்டு நின்றதைக் கண்டாள். அவர்களைக் கண்ட கல்யாணியம்மாளது உயிரில் முக்கால் பாகமும் உடனே போய்விட்டதென்றே சொல்ல வேண்டும். அவள் அப்படியே கல்லாய்ச் சமைந்து போனாள். அதற்குள் மதனகோபாலன் செத்தேன் பிழைத்தேன் என்று வாசற்படிக் கப்பால் ஒடிப்போய்விட்டான். • . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/157&oldid=649597" இலிருந்து மீள்விக்கப்பட்டது