பக்கம்:மதன கல்யாணி-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மதன கல்யாணி

இருக்கட்டும் என்று தானும் விட்டு வைத்திருக்கிறேன்; ஆனால் இந்த வெற்றிலை சாட்சியாகச் சொல்லுகிறேன், அந்தக் கிழவர், என்னுடைய உடம்பைத் திண்டிக்கூட அறியார் அவருடைய விஷயத்தில் கூட என் மனம் கொஞ்சமாகிலும் இளகவில்லை. அப்படி கவரிமான் போல உயிரைக் காட்டிலும் மானமே பெரிதாக இது வரையில் காத்து வந்த நான் இப்போது என்ன காரியம் செய்து விட்டேன்! இது கனவோ நினைவோ என்ற சந்தேகங்க.ட உண்டாகிறது. இப்போது பெட்டி வண்டியில் வந்த போது கூட

“நீ கடைசி வரையில்

என்னை வி.பி. ஹாலில் ஏற்றிவிட்ட கிழவர், இப்படித்தான் இருக்கப் போகிறாயா? உன்னை நினைத்து நினைத்து என்னுடைய முக்கால் உயிரும் போய்விட்டது. இனி நிற்கும் கால் உயிர் உன்னை அடைய வேண்டும் என்ற ஆசையின் வலுவினாலேயே நிற்கிறது; இரண்டொரு தினத்தில் உண்டு இல்லை என்பது தெரியாவிட்டால் இந்த உயிர் நில்லாது போலிருக்கிறது” என்று சொல்லி என்னை அனுப்பினார். வழியில் வந்த போது நான் அதே தியானமாக வந்தேன். “இந்தக் கிழவரை விட்டால், நமக்கு வேறே கதி இல்லையே; இவர் லட்ச லட்சமாகப் பொருளை வாரி வாரிச் சொரிகிறாரே, இவரை வேண்டாம் என்று தடுத்துவிட்டு என்ன செய்கிறது! இவரிடத்தில் காதலுண்டாக வில்லையே! என்ன செய்கிறது?” என்று யோசித்து யோசித்து சிந்தை கலங்கி கடைசியாக ஒருவகையான் முடிவும் செய்யாமல் வந்து பங்களாவுக்குள் நுழைந்தேன். அதற்கு முன்னாகவே ஈசுவரன் என் விஷயத்தில் கவலை கொண்டு என்னென்னவோ ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறான்; ஆகா! இதை என்ன வென்று சொல்வது! அந்தக் கடவுளை சர்வக்ஞன், சர்வவியாபி, சர்வபிதா, சர்வமாதா என்றே சொல்ல வேண்டும்” என்று கூறி பிரம்மாண்டமாக ஐந்தாறு பெருமூச்சுகளை வரிசையாக வெளிப் படுத்தினாள்; கண்களிலிருந்து கண்ணிரை ஒடவிட்டாள்; அப்படியே வெறுவெளியைப் பார்த்து அதில் மறைந்திருந்த கடவுள் மீது லயித்துப் போனவள் போலவும், அவனது விந்தை யான திருவிளையாடல்களைக் கண்டு வியப்புற்று நகைப்பவள்

போலவும் பாசாங்கு செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/162&oldid=649603" இலிருந்து மீள்விக்கப்பட்டது