பக்கம்:மதன கல்யாணி-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 145

அந்த வஞ்சக மொழிகளைக் கேட்டு, அவளது சாகசங்களைக் கண்ட மைனர், அந்தக் கட்டுக்கதை முழுதையும் வேதவாக்கியமாக நம்பியதன்றி, அவளுக்கிணையான அருந்ததி இந்த உலகத்தி லேயே இருக்க மாட்டாள் என்றும், தான் அவளை அடைய, தனது உயிரையே அவள் கேட்பதானாலும், அப்போதே அதை எடுத்து அவளது பாதத்தடியில் வைத்துவிட ஆயத்தமாக இருந்தான்; அவ்வாறு இரண்டொரு நிமிஷத்தில் தீர்மானித்துக் கொண்ட மைனர் புன்னகையோடும் வியப்போடும் அவளை நோக்கி, “அப்படியா சரி; என்னுடைய முக்கியமான கவலை தீர்ந்தது; இந்த நாடகத்தின் சொந்தக்காரர் உன்னை ஆசை நாயகியாக வைத்திருக் கிறார் என்று உன்னுடைய வேலைக்காரக் கிழவி தெரிவித்தாள். அதைப்பற்றியே நான் கொஞ்சம் கவலை கொண்டிருந்தேன்; இப்போது அது வெறும் நட்போடு நிற்கிறதென்பதை உன் வாயால் கேட்க, நிரம்ப சந்தோஷமாகிறது. உன்னுடைய வேலைக் காரர்களை கூட நீ நம்பி உண்மையை எல்லாம் சொல்லுகிற தில்லை என்பது தெரிகிறது” என்றான்.

பாலாம்பாள் அலட்சியமாகவும் அபிநயத்தோடும், “இதை எல்லாம் வேலைக்காரரிடம் தெரிவிப்பார்களா? கிழவர் என்னோடு மிகவும் நெருங்கி அன்னியோன்னியமாகப் பழகுகிறதைக் கண்டு வேலைக்காரர்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த சமாசாரத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தால், என்னைக் கண்டு ஆசைப்படும் வேறு எத்தனையோ பிரபுக்கள் எல்லாம், அருகில் நெருங்கிவந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள் அல்லவா; அந்தக் கருத்தோடு தான், வேலைக்காரர்கள் எப்படியாகிலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன்” என்றாள்.

அதைக் கேட்ட மைனர், “அப்படியானால், கிழவரிடம் உனக்கு அவ்வளவாகப் பிரியமில்லை என்றே நினைக்கிறேன்” என்றான்.

பாலாம்பாள் புன்சிரிப்போடு, “அதைத்தான் முன்னமேயே சொல்லிவிட்டேனே. பிரியமிருந்தால், அவருடைய விருப்பப்படி இருக்க, நான் இதுவரையில் ஏன் ஆக்ஷேபிக்கிறேன்? தவிர, எனக்கு அவரிடம் பிரியமிருந்தால், அவரை விலக்கிவிட நான் நினைக்க முடியாதல்லவா” என்றாள். - ம.க.1-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/163&oldid=649604" இலிருந்து மீள்விக்கப்பட்டது