பக்கம்:மதன கல்யாணி-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 மதன கல்யாணி

அதற்குள் மைனர், அவளது இடக்கரத்தை நன்றாக எடுத்துத் தனது மடியின் மேல் வைத்துக் கொண்டு, அதன் அழகைக் கண்டு நிரம்பவும் சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தவனாய், அதை மெதுவாகத் தடவி, அதனோடு விளையாடிய வண்ணம் அவளிடத்தில் பேசத் தொடங்கினான்.

ஒரு விட்டாரது குழந்தை அடுத்த வீட்டிற்குப் போனால், அவர்கள் அதை எடுத்துக் கொஞ்சிக் குலாவி அதனோடு பேசி ஆனந்தம் அடைவதும், அதன் பெற்றோர், அது அண்டை வீட்டாரின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறதென்று நினைத்து, அதைப்பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதும் உலக இயற்கை அல்லவா! அதுபோல பாலாம்பாள் மைனரது மடிமீது சென்றிருந்த தனது இடது கரம் இருவரது நட்பையும் வளர்க்க ஒரு சாதனமாக, தன் விஷயத்தில் நல்ல அனுகூலம் செய்து கொண்டிருப்பதாக எண்ணி, அதைப்பற்றி முற்றிலும் மறந்தவள் போலவும் அவள் தனது மனத்தை வேறிடத்தில் வைத்திருப்பவள் ப்ோலவும் மொழிந்து கொண்டிருந்தாள்.

கடைசியாக அவள் கூறியதைக் கேட்ட மைனர், வீணையின் தந்திகளை மீட்டுவது போல அவளது கரத்தை நெருடிய வண்ணம் “அப்படியானால், நீ கிழவருடைய சிநேகத்தை விலக்கிவிடத் தீர்மானித்து விட்டாய் என்பது ஏற்படுகிறது” என்று புன்னகை யாகக் கேட்டான்.

பாலாம்பாளும் புன்சிரிப்பாக, “இப்போது சிநேகம் இருந்தால் அல்லவா அதை விலக்குகிற தென்கிற சங்கதி ஏற்படும். ஒரு கார்டியன் ஒரு பெருத்த சொத்தைக் காப்பாற்றி, அதை அதன் சொந்தக்காரரிடம் ஒப்புவிப்ப துண்டல்லவா; அதுபோல, அவர் என்னை இதுவரையில் ஊட்டி வளர்த்துக் காப்பாற்றி அழகுபடுத்தி வைத்திருந்தார். இப்போது அதற்கு உரிமையுடையவர் வந்து விட்டபடியால், அவரிடம் ஒப்புவித்துவிட்டு விலகிக் கொள்ளப் போகிறார். அவ்வளவு தான் காரியம் என்று பெருமகிழ்ச்சியோடு கூறினாள். -

மைனர் அகமகிழ்ந்து தற்பெருமையால் பூரித்தவனாய், “சரி; ரிமையுடையவர் வந்துவிட்டார் என்கிறாயே, அவர் இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/164&oldid=649605" இலிருந்து மீள்விக்கப்பட்டது