பக்கம்:மதன கல்யாணி-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$48 மதன கல்யாணி

அதைக் கேட்ட மைனர் ஆனந்த சாகரத்தில் மிதந்து கிடந்து நீந்தி யவனாய் மகிழ்வே வடிவாக்ச் சிறிது நிமிர்ந்து அவளுக் கெதிரில் நெருங்கி உட்கார்ந்து, “சரி; இது நல்ல நேரம், கரும்பு தின்ன எந்த மூடன் கூலி கேட்பான்? பரமபக்த சிரோன்மணியான உனக்கு இந்தத் தெய்வம் நீகேட்ட முதல் வரத்தைத் தாராளமாகக் கொடுத்து விட்டது; இன்னும் என்ன வரம் வேண்டுமோ அதையும் கேட்டுக் கொண்டால், கொடுக்கத் தயாராக இருக்கிறது” என்று கூறிய வண்ணம், தனது வலக்கரத்தை அவளது இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொள்ள மெதுவாகக் கொண்டு போனான்.

அவனது கருத்தை உணர்ந்த அந்த யெளவனக் கன்னிகை, அவனது கையைத் தடுக்காமல் மிகுந்த கூச்சத்தினால் தனது தேகத்தை சுருக்கி நெளித்துக் கொண்டவளாய், “ஏதேது! என்னுடைய அனுமதி இல்லாமலேயே மோகனாஸ்திரங்கள் என்னைச் சுற்றி வளைக்கின்றனவே! நான் இன்று இரவு தப்ப முடியாது போலிருக்கிறதே!” என்று கூற, அதற்குள் மைனர் துணிவடைந்து, தனது வலக்கரத்தால் அவளைக் கட்டியனைத்துத் தன்னிடம் ஆசையோடு இழுக்க, அவள் சும்மாவிருக்க மைனர் அவளை ஆலிங்கனம் செய்து முத்தமிடும் சமயத்தில், அவள் சடக்கென்று திமிறி சிறிது தூரம் அப்பால் நகர்ந்து உட்கார்ந்த வண்ணம், “என்ன அவசரம் இது சுவாமி வரம் கொடுத்துக் கொண்டே இருக்கும் போது இப்படித்தான் இடைஞ்சல் செய்கிறதா? எனக்கு இன்னொரு வரம் கொடுப்பதாகச் சொன்னிகள், அதைக் கேட்கிறேன். அதைக் கொடுத்தவுடன் இவ்வளவு காலமாக நான் காப்பாற்றி வைத்துள்ள எல்லாவற்றை யும் தங்களிடம் ஒப்புவித்து விடுகிறேன். அதுவரையில் குறுக்கிட்டால் தங்களுடைய காரியந் தான் தாமதப்பட்டுப் போகிறது” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் புன்சிரிப்போடு தனது வலக்கரத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்த வண்ணம், “சரி; அப்படியே ஆகட்டும். உனக்கு வேண்டியதைச் சீக்கிரம் கேட்டுக் கொள்” என்று அவசரமாக மொழிந்தான்.

பாலாம்பாள் அவனை ஒய்யாரமாக நோக்கி, “நான் கேட்டதிருக் கட்டும். எஜமானருக்குக் கலியாணம் ஆகிவிட்டதா இல்லையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/166&oldid=649607" இலிருந்து மீள்விக்கப்பட்டது