பக்கம்:மதன கல்யாணி-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் $49

என்பதை முதலில் அறிந்து கொள்ள எனக்கு ஆசையாய் இருக்கிறது” என்றாள்.

அதைக் கேட்ட மைனர், “இது என்ன கேள்வி? நான் உன்னை

நாடி இங்கே வந்ததில் இருந்தே, எனக்கு இன்னமும் கலியாணம் ஆகவில்லை என்பது ஏற்படுகிறதல்லவா?” என்றான்.

அதைக் கேட்ட அந்த அணங்கு சந்தோஷமாக நகைத்த வண்ணம், “ஆம் ஆம்; ஏற்படுகிறது. நான் பெண்பிள்ளை தானே; தாங்கள் சொல்லாமல் என்னுடைய மூளைக்கே அவ்வளவு தூரம் சுயமாக எட்டுகிறதா? ஆனால் தாங்கள் சொல்வதில் இருந்து இன்னொரு விஷயமும் ஏற்படுகிறது” என்று அதற்கு ஒருவால் ஒட்ட வைத்தாள்.

மைனர், “அது என்ன விஷயம்” என்றான்; பாலாம்பாள், “வேறொன்றும் இல்லை. தங்களுக்குக் கலியானம் ஆகாதிருப்ப தாலே தான் தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னபடியால், தங்களுக்கு இனி கலியாணம் ஆகிவிட்டால் இங்கே வரமாட்டீர்கள் என்பதும் ஏற்படுகிறதே. தாங்கள் எதையோ சொல்லப் போய் எனக்குக் கொடுத்த முதல் வரத்துக்கு மாறான ஒரு சங்கதியை இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டீர்களே’ என்றாள்.

மைனர் மிகுந்த அன்போடு, “சேச்சே! நான் அப்படியா

சொன்னேன்! நான் இறந்த காலத்து சங்கதியைச் சொன்னேன். நீ எதிர்காலத்து சங்கதியைச் சொல்லுகிறாய். நீயும் நானும் இனி எப்போதும் பிரிவதில்லை என்று நான் எப்போது உனக்கு வாக்குக் கொடுத்தேனோ, அப்போதே நான் உன்னைக் கலியாணம் செய்து கொண்ட மாதிரியல்லவா? அப்படியிருக்க, நான் இனி வேறொருத் தியைக் கலியாணம் செய்வேன் என்கிற சந்தேகமே எதற்கு?” என்றான்.

அதைக் கேட்ட பாலாம்பாள் அவனை மோகமான பார்வை யாகப் பார்த்து, குழந்தை போல மழலை மொழியாகப் பேசி, “ஆமாம்; புருஷர்கள் இப்படித்தான் முதலில் ஆளை ஏமாற்று கிறது. காரியம் ஆகும் வரையில் கழுதையின் காலையும் பிடி என்ற பழமொழிப்படி, அவர்கள், தங்களுடைய புது மோகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/167&oldid=649608" இலிருந்து மீள்விக்கப்பட்டது