பக்கம்:மதன கல்யாணி-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மதன கல்யாணி

மாட்டி விட்டு, மைனரையும் அழைத்துக் கொண்டு சிறிது தூரத்தில் இருந்த பளுவான பித்தளைக் கட்டிலை சகடைகளால் உருட்டித் தள்ளி கதவின் பக்கத்தில் குறுக்காக மறைத்து வைத்தாள்; இன்னமும் சோபாக்கள் நாற்காலிகள் பூந்தொட்டிகள் முதலிய சாமான்களை எல்லாம் கொணர்ந்து கட்டிலின் மீது வைத்து கதவு முழுதையும் மறைத்துவிட்டாள். திருடர்கள் கதவில் துளை செய்து தாழ்ப்பாளை விலக்கிக் கொண்டு கதவைத் திறப்பது வழக்கம் என்பதை அவள் கேள்வியுற்றிருந்தவள் ஆதலால் அவர்கள் தாழ்ப்பாளை விலக்கினாலும் கதவைச் சுலபத்தில் திறக்க முடியாமல் செய்து வைத்துவிட்டு தாங்கள் வெளியில் போய்விடுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று அவள் அங்கும் இங்கும் ஓடிப் பார்த்தாள். நாற்புறங்களிலும் இரும்புக் கம்பிகள் வைத்த ஜன்னல்கள் மிகவும் உறுதியாக வைக்கப்பட்டிருந்தமையாலும், அவைகளை விலக்க கடப்பாரை முதலிய எவ்விதமான கருவியும் அந்தச் சயன அந்தப்புரத்தில் இல்லாமல் இருந்தமையாலும், அவைகளின் வழியாகத் தப்பிப்போவது சாத்தியம் இல்லாததாக இருந்தது. ஆதலால், பாலாம்பாள் மிகவும் தத்தளித்தவளாய் மேலே நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் இருந்த அறை முதல் மாடத்தில் உள்ளது. அதற்கு மேல் இருந்த மொட்டை மெத்தையி லிருந்து உட்புறத்தில் வெளிச்சம் உண்டாவதற்காக, மேல் மச்சில் இரண்டு கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டடி நீளமுள்ளவையாக இருந்தமையால் அவைகளின் வழியாக ஒர் ஆள் எளிதில் நுழைந்து போவதற்கு இடமிருந்தது. அவைகளைப் பார்த்தவுடனே பாலாம்பாளுக்கு ஒரு யுக்தி தோன்றியது. அந்த இரண்டு கண்ணாடிகளில் ஒன்றை உடைத்து அதன் வழியாகத் தாங்கள் மொட்டை மெத்தைக்குப் போய்விட்டால், அங்கிருந்து படிகளின் வழியாகத் தோட்டத் திற்குள் இறங்கிவிடலாம் என்று பாலாம்பாளுக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. அதை அவள் இரண்டொரு வார்த்தையாக மைனருக்குத் தெரிவிக்க, அவனும் ஆமோதித்தான்; ஆனால் அந்த மேல்மச்சு அவர்களிருந்த தரையிலிருந்து இரண்டாள் உயரத்தில் இருந்தது. இரண்டு கண்ணாடிகளுள் ஒன்று அந்தச் சயன அறையின் நடுவில் இருந்தமையால், அதன் வழியாகப் போவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/176&oldid=649618" இலிருந்து மீள்விக்கப்பட்டது