பக்கம்:மதன கல்யாணி-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 161

தள்ளவே, கதவைத் தடுப்பதற்காக உட்புறத்தில் எழுப்பப் பட்டிருந்த பொய்க் கோட்டை தலைகீழாகக் கவிழ்ந்தது. கட்டில், சோபாக்கள், நாற்காலிகள், மேஜைகள், பூத்தொட்டிகள் முதலிய யாவும் தடதடவென்று அடியோடு அப்புறம் சாய்ந்து பெருத்த இடியோசையைப் போல திடீரென்ற ஓசையோடு கீழே வீழ்ந்தன. சாமான்கள் யாவும் ஒடிந்தும் முறிந்தும் உடைந்தும் நொறுங்கியும் ஒன்றன் மேல் ஒன்று குதிரை சவாரி செய்தும் ஒன்றை ஒன்று விடாமல் ஆசையோடு கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டும், எல்லாம் பிசரிக் கொண்டன. கட்டிலின் மேல் சட்டத்தில் நின்று கண்ணாடியை உடைத்துக் கொண்டிருந்த மைனரோ மாயமாக மறைந்து அந்தரத் தியானமாகி விட்டான்.

அடுத்த நிமிஷம் கதவு திறக்கப்பட்டது; உடனே கட்டையன் குறவனும் மூன்று திருடர்களும் கத்திகளையும் கட்டாரிகளையும் கையில் ஏந்திக் கொண்டு பனைமரங்கள் போல உள்ளே நுழைந்தனர். அந்தச் சயன அறையில் சுவரில் மாட்டப் பட்டிருந்த ஒரு கண்ணாடி விளக்கு பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டிருந் தது. கட்டிலும் அதன் மேல் இருந்த சாமான்களும் மைனரும் தலைகீழாகச் சாய்ந்து பிரம்மாண்டமான ஓசையோடு வீழ்ந்ததைக் கண்ட பாலாம்பாள் கதி கலங்கிக் குலைநடுக்கம் எடுத்துப் பெரிதும் தத்தளித்தாள் ஆனாலும், மிகவும் யூகம் நிறைந்த அவளது மனம் மாத்திரம் அதன் வல்லமையை இழந்துவிடவில்லை; கட்டிலும் சாமான்களும் கவிழ்ந்தவுடனே, அவள் விரைவாக ஒடி கண்ணாடி விளக்கை ஊதி அணைத்துவிட்டாள். அறைமுழுதும் இருள் சூழ்ந்து கொண்டது. அவள் உடனே ஒடி அலமாரியைத் திறந்து அதிலிருந்த மைனரது பத்திரத்தை எடுத்து மடக்கி இரவிக்கைக்குள் பத்திரமாகச் செருகிக் கொண்டாள்; இன்னொரு மூலையில் இருந்த டெலிபோன் (Telephone) என்னும் செய்தி அனுப்பும் இயந்திரத் தண்டை போய் அதை எடுத்து வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குச் செய்தி அனுப்பலாமா என்று யோசனை செய்தாள். அவற்றின் இலக்கம் அவளுக்குத் தெரியாது ஆகையால், அப்படிச் செய்ய சாத்தியப்படாமல் போய்விட்டது: மைனர் பத்திரம் எழுதிக் கொடுத்த பிறகு, அவள் ஒருவிதமான முடிவிற்கு வந்திருந்தாள், பொழுது விடிந்தவுடனே நாடகத்

ம.க.i-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/179&oldid=649621" இலிருந்து மீள்விக்கப்பட்டது