பக்கம்:மதன கல்யாணி-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #67

கொண்டிருக்கிறாய்? எழுந்திரடா” என்று தனது பூட்ஸ் போட்ட காலால் ஓங்கி மைனரது முதுகில் ஓர் உதை கொடுக்க, அந்த வலுவான உதையைத் தாங்க மாட்டாமல் மைனர், “ஐயோ! அப்பா என்னை அடிக்க வேண்டாம்; நான் திருடனல்ல” என்று சொல்லிக் கொண்டே சடக்கென்று எழுந்து நின்று, அங்கே இருந்த நான்கு ஆண் பிள்ளைகளையும், வெரித்து வெரித்து நோக்கி இரக்கமான பார்வையாக பாலாம்பாளை நோக்கினான். அதற்குள் பாலாம்பாள், “ஐயோ! எனக்கு மயக்கம் வருகிறதே! என்னைப் படுக்க வையுங்கள்” என்று அலறிக்கொண்டு கட்டிலை நோக்கி ஒட, அவர்கள் அவளை மெல்ல நடத்திக் கொண்டு போய், கட்டிலில் மெத்தை மீது படுக்க வைக்க, அவள் மூர்ச்சித்தவள் போல வீழ்ந்து விட்டாள். அப்போது ஒரு போலிஸ்காரன், மைனரது கைகளுக்கு விலங்கிட்டு நிறுத்தினான். சப்இன்ஸ்பெக்டர் தமது பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு, சரி ஸ்டேஷனுக்குப் போவோம்’ என்று கூறினார். அதைக் கேட்ட மைனர், “ஐயா! என்னை ஏன் விலங்கிட்டு அழைத்துப் போகிறீர்கள்? நான் திருடனல்ல. இந்தப் பெண்ணினிடத்தில் சிநேகம் செய்து கொள்வதற்காக வந்தவன். என்னை விட்டு விடுங்கள்” என்று கூறி மன்றாடினான்.

சப் இன்ஸ்பெக்டர்:- நீ இங்கே எப்போது வந்தாய்?

மைனர்:- திருடர் வருவதற்கு ஒரு நாழிகைக்கு முன் வந்தேன்.

சப் இன்ஸ்பெக்டர்:- திருடர் வந்தபோது நீ எங்கே இருந்தாய்? மைனர்:- நானும் இவளும் கட்டிலின்மேல் உட்கார்ந்திருந்தோம்.

சப் இன்ஸ்பெக்டர்:- உனக்கும் இவளுக்கும் எவ்வளவு காலமாகப் பழக்கம்?

மைனர்:- இன்று ராத்திரி இரண்டு மணிக்கு மேல் நான் இங்கே வந்து பழக்கம் செய்து கொண்டேன்.

சப் இன்ஸ்பெக்டர்:- இவள் திருடர் வந்தபோது தனியாகப் படுத்துத் துரங்கிக் கொண்டிருந்ததாகச் சொன்னாளே?

மைனர்:- இவள் நாடகத் தலைவருக்குப் பயந்து சொல்லி இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/185&oldid=649627" இலிருந்து மீள்விக்கப்பட்டது