பக்கம்:மதன கல்யாணி-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171

வைக்க, அவன் அதன் அருமையைச் சிறிதும் உணராதவனாயும், தனது அன்பிற்கு அருகமற்றவனாயும் நடந்து, தனது விருப்பத்தின்படி செய்ய மறுத்து ஓடியதைப்பற்றி, அவன் மீது அவளது மனதில் பெருத்த சினம் கொதித்தெழுந்து, அவள் தனது குற்றத்தை எல்லாம் அவன் மீது சுமத்தி தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுகூலம் செய்தது; தான் அந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெருத்த பொய்யைச் சொன்னாலன்றி தப்ப முடியாதென்பதை அவள் ஒரே நொடியில் உணர்ந்து கொண்ட தன்றி, தான் எவ்வாறு தந்திரம் செய்வது என்பதைப் பற்றியும், அவள் ஒருவகையான முடிவு செய்து கொண்டு மதனகோபால னால் ஏற்பட்ட ஏமாற்றத்தினாலும், பெண்கள் வந்ததினால் திடீரென்று எழுந்த பீதியினாலும் உண்டான முகக்குறிகளை எல்லாம் மறைத்துக் கொண்டு, சந்தோஷத்தினால் மலர்ந்த முகத்தோடு மெதுவாக நிமிர்ந்து தனது புத்திரிகளைப் பார்த்து, “இந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்லுவேன்! நீங்கள் கால் நாழிகைக்கு முன் வராமல் போனிர்களே! வாருங்கள் முதலில் சோபாவுக்குப் போவோம்” என்று கூறி அங்கே நடந்த விஷயத்தை விளையாட்டுப் போலக் காட்டி நடித்து, கட்டிலண்டையிலிருந்த சோபாவை நோக்கி மெல்ல நடந்தாள்.

என்றைக்கும் காணப்படாத புதுமையான அந்த விபரீதக் காட்சியைக் கண்டு அதன் உண்மை இன்னதென்று உணர மாட்டாமல் முற்றிலும் வியப்பும் திகைப்பும் அடைந்து சித்திரப் பதுமைகள் போல அசைவற்று நின்ற புதல்வியர் இருவரும், தாயுடன் கூடவே பின் தொடர்ந்து சென்றனர். கட்டிலண்டையில் இருந்து சோபாவின் அருகில் சென்ற கல்யாணியம்மாள் அதன் மேல் உட்கார்ந்து கொண்டாள். வாசற்படியில் இருந்து அந்த சோபாவிற்கு அவள் சென்ற அந்த ஒரு நிமிஷ நேரத்திற்குள், பெண்களிடம் தான் எவ்விதமாகப் பேச வேண்டும் என்பதை அவள் நன்றாக முடிவு செய்து கொண்டவளாய் இளங்குமரிகளை நோக்கி, “நீங்கள் எவ்வளவு நேரம் யோசனை செய்து பார்த்தாலும், இங்கே என்ன நடந்ததென்பதைக் கொஞ்சங்கூட யூகிக்க உங்களால் முடியாது. அப்படிப்பட்ட அதிசயமான விஷயம் நடந்தது” என்று மிகவும் அன்பான குரலில் கூறவே, அதைக் கேட்ட துரைஸானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/189&oldid=649631" இலிருந்து மீள்விக்கப்பட்டது