பக்கம்:மதன கல்யாணி-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177

கல்யாணியம்மாள், “அப்பத்தான் இருக்கும்; இல்லையானால் அவன் ஏன் அந்தப்புரத்துக்குள் வருகிறான். சரி; இதைப் பற்றிப் பேசுவதே அசங்கியமாக இருக்கிறது. இதோடு பேச்சை விடுங்கள். நாளை முதல் இந்த பங்களாவின் அண்டையிலும் கால் வைக்கக் கூடாதென்று கண்டித்து அவனிடம் சொல்லி விட்டேன். நல்ல யோக்கியனான வேறொரு வீணை வித்துவானைப் பார்த்து நாம் சீக்கிரத்தில் அமர்த்திக் கொள்வோம். நீங்கள் போய் இல்லை போடச் சொல்லுங்கள். சாப்பாட்டுக்கு நேரமாகிறது. நான் ஐந்து நிமிஷத்தில் வருகிறேன்” என்று முடிவாகக் கூற, பெண்கள் இருவரும் உடனே அவளது உத்தரவிற்குக் கீழ்ப்படிந்தவர்களாய் அந்தச் சயன மாளிகையை விட்டு வெளியில் போய் போஜன மாளிகையை நோக்கி நடந்தனர்.

அவ்விருவரும் மறைந்தவுடனே கல்யாணியம்மாள் சகிக்க ஒண்ணாத சஞ்சலமடைந்த மனத்தினளாய் தனது பஞ்சணையின் மீது படுத்தாள். தான் கூறிய கட்டுக் கதையை தனது மூத்த புதல்வி நம்பவில்லை என்பதை அவள் கண்டு கொண்டாள் ஆதலால், முன்னிருந்த பற்பல வேதனைகளுக்குத் துணையாக அந்த வேதனையும் ஒன்று கூடி அவளது மனத்தை உலப்ப ஆரம்பித்தது அவளது நிலைமை அப்படி இருக்க, அந்த மாளிகையை விட்டு வெளிப்பட்ட மடந்தையர் இருவரும் இரண்டொரு விடுதிகளைக் கடந்து அப்பாற் சென்றவுடனே மூத்தவளான துரைஸானியம்மாள் நாற்புறங்களையும் உற்று நோக்கி அண்டையில் அன்னியர் எவருமில்லை என்பதை உணர்ந்து கொண்டு, தனது தங்கையை நோக்கி, “கோமளவல்லி அம்மாள் சொன்ன கதை எப்படி இருக்கிறது பார்த்தாயா?” என்று தணிவான குரலில் வினவினாள். அதைக் கேட்ட கோமளவல்லி தனது அக்காளது சொல்லின் உட்கருத்தை நுட்பமாக அறிந்து கொள்ளாதவளாய், “மதனகோபாலனுடைய நடத்தையை நினைக்க நினைக்க, என்னுடைய உடம்பு நடுங்குகிறது. இது. வரையில் எவ்வளவோ யோக்கியமாக நடந்து வந்தவன் அவ்வளவு துணிச்சலான காரியம் செய்து விட்டான் பார்த்தாயா!’ என்று வியப்போடு மொழிந்தாள். ம.க.!-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/195&oldid=649638" இலிருந்து மீள்விக்கப்பட்டது