பக்கம்:மதன கல்யாணி-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O மதன கல்யாணி

அப்படிச் செய்யாமல், மெளனமாக அம்மாளே ஒடி அவனைப் பிடித்து அடிக்கப் போனார்களா? அல்லது, வேறே என்ன செய்யப் போனார்கள்? அவன் ஓடினால், சனியன் ஒழிந்தது நல்லதென்று அம்மாள் அதைப் பற்றி சந்தோஷப்பட்டு பேசாமல் அல்லவா இருக்க வேண்டும். அவன் ஒட, அம்மாள் துரத்தியதில் இருந்து, என் மனதில் இரண்டு வகையான சந்தேகங்கள் உதிக்கின்றன. அம்மாள் ஏதோ தவறான காரியத்தைச் செய்யச் சொல்ல, அவன் அதைச் செய்ய மறுத்து ஒட, அம்மாள் அவனைப் பிடிக்கும் பொருட்டு துரத்தி இருக்கலாம். அல்லது, அவன் பலவந்தமாக அம்மாளிடத்தில் ஏதேனும் துன்மார்க்கமான காரியம் செய்து விட்டு ஒட, அம்மாள் துரத்தி இருக்க வேண்டும். அவன் பலவந்தமாக ஏதாவது செய்ய முயன்றிருந்தால் அம்மாள் அவசியம் கூச்சலிட்டிருப்பார்கள். கூச்சலிடாததில் இருந்து முதல் சந்தேகமே உறுதியாக என் மனதில் படுகிறது - என்றாள்.

அதைக் கேட்ட கோமளவல்லியின் கபடமற்ற மனம், மிகுந்த கலக்கமும் குழப்பமும் அடைந்தது. அதுகாறும் எந்த விஷயத் திலும் தனது தாய் பரிசுத்தமான நடத்தையுடையவள் என்பதை நன்றாகக் கண்டு, அதே உறுதியை மாறாமல் கொண்டிருந்தவள் ஆதலால் அந்தச் சம்பவம் எவ்விதமான சந்தேகத்தை உண்டாக்கிய தானாலும், தனது தாய் விஷயத்தில் கல்மஷமாக நினைக்க அவளது மனம் இடந்தரவில்லை. மூத்தவளோ தாய் விஷயத்தில் சந்தேகம் கொண்டுவிட்டாள். அவ்வாறு இளங்குமரிகள் இருவரும் தணிவான குரலில் சம்பாவித்த வண்ணம் போஜன மாளிகையை அடைந்தனர். அவ்விடத்தில் வேலைக்காரர்களும் தாதிகளும் இருந்ததைப் பற்றி, அவர்களது சம்பாஷனை அவ்வளவோடு முடிவுற்றது.

அதன் பிறகு கால் நாழிகை நேரத்தில் கல்யாணியம்மாளும் அவ்விடத்திற்கு வந்து சேர, அவர்களது இராப் போஜனம் வழக்கப் படி நிறைவேறியது. கல்யாணியம்மாள் தனக்கு இன்னமும் தலை நோவாய் இருப்பதாகக் கூறி, சொற்ப போஜனமும் செய்யாமல், தான் சீக்கிரம் சயனித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி எழுந்து போய் விட்டாள். மடந்தையர் இருவரும் தங்களது போஜனத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/198&oldid=649641" இலிருந்து மீள்விக்கப்பட்டது