பக்கம்:மதன கல்யாணி-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 181

முடித்துக் கொண்டு தத்தம் சயன அந்தப்புரங்களுக்குப் போய் சயனித்துக் கொண்டனர்.

அந்த இரவு கல்யாணியம்மாளுக்கு மகா துன்பகரமான கொடிய இரவாக முடிந்தது. அன்று அவளுக்கு நேர்ந்த ஏமாற்றமும் இழிவும் அவமானமும் அவளது மனதில் பெருத்த விசனமாக நிரம்பி, கோபமாகப் பொங்கி, அவளது மனதைக் கொதிக்கச் செய்து கொண்டிருந்தன. அதனால், அவளுக்கு ஆகாரத்தின் மீதே விருப்பம் செல்லவில்லை. இருந்தாலும், தான் போஜன மாளிகைக்குப் போகாமல் இருந்தால், அதைப்பற்றி தனது புதல்வியரும் பிறரும் ஏதேனும் வம்பு வளர்ப்பார்கள் என்ற நினை வினால், அங்கே போய்த் தலைநோய் கொண்டவள் போல நடித்து உணவருந்தாமல் திரும்பி சயன மாளிகைக்கு வந்தவள் ஜன்னல் களை எல்லாம் நன்றாக மூடிவிட்டுத் தனது சப்பிரமஞ்சத்தில் சயனித்துக் கொண்டாள். அன்றைய ஆகாரம் எப்படி நிராகார மாயிற்றோ, அப்படியே அன்றைய நித்திரையும் அவளுக்கு சத்துருவாகப் போய்விட்டது. அவள் படுத்திருந்த கட்டிலின் மீது மூன்று மெத்தைகள் ஒன்றன் மேல் ஒன்றாக போடப்பட்டிருந்தன. அடியிலிருந்த மெத்தை ஒரு முழ உயரமுள்ளதாகவும், முற்றிலும் மிருதுவான உரோமங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அதற்கு மேல் இருந்தது ஒரு சானுயரம் பருத்ததாகவும், குள்ளவாத்துக் களின் உடம்பில் இறகிற்குள் முளைத்து பஞ்சைக் காட்டிலும் மகா நுட்பமாக இருக்கும் பூமயிர்களே நிரப்பப் பட்டதாகவும், வழுவழுப்பான மகமலால் போர்த்தப் பெற்றதாகவும் இருந்தது. அதன் மேல் வெல்வெட்டினால் ஆக்கப்பட்ட எண்ணிறந்த தலை யணைகள், திண்டுகள் முதலியவை பொருத்தப் பெற்றிருந்தன. அத்தகைய மகா சொகுசான சயனத்தின் மீது சயனித்திருந்தாள் ஆனாலும், கல்யாணியம்மாளுக்கு அது, கல்களும், முள்களும், தேள்களும் நிறைந்த மகா கொடிய பாறை போலத் தோன்றி வருத்தி, அவளது தேகத்தைப் புண்படுத்தின ஆதலால், அபாரமான செல்வத்திலும் சுகபோகங்களிலும் ஆழ்ந்து கிடந்த அந்தச் சீமாட்டிக்கு துயில் என்ற ஒரு பொருள் மாத்திரம் பஞ்சமாகப் போய் அவளை நரகவேதனையில் ஆழ்த்தியது. எவ்வாறெனில், அவளது மனமான களத்தில் மகா உக்கிரமான கொடிய யுத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/199&oldid=649642" இலிருந்து மீள்விக்கப்பட்டது