பக்கம்:மதன கல்யாணி-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 38 - மதன கல்யாணி

அவன் இங்கே என்ன செய்தானோ தெரியவில்லையே! அவன் இங்கே ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டிருந்தால், எனக்கு ஒரு வார்த்தை சொல்லியனுப்பி இருக்கக் கூடாதா! நான் முன்னாடியே அவனை வேலையைவிட்டு நீக்கியிருப்பேனே! நேற்று சாயுங்காலம், எனக்கு அவனால் ஏற்பட்ட இழிவு இல்லாமல் போயிருக்குமே!” என்று கூறிய வண்ணம் மிகவும் கபடமான பார்வையாக, மீனாகூஜியம்மாளையும், கண்மணி

யம்மாளையும் மாறிமாறிக் கூர்ந்து நோக்கினாள்.

அப்போது கண்மணியம்மாளது மனநிலைமை விவரிக்க இயலாததாக ஆகிவிட்டது. கல்யாணியம்மாள் மதனகோபாலனது பெயரைக் குறித்தது முதல், அந்த இரண்டு நிமிஷ நேரத்தில், அவளது மனதில் கோடாநுகோடி எண்ணங்களும் சம்சயங்களும் உதித்து உதித்து மறைந்தன. மதனகோபாலனைப் பற்றி கல்யாணி யம்மாள் எவ்விதமான விபரீத சமாசாரம் சொல்லப் போகிறாளோ என்ற கவலையும் அச்சமும் எழுந்து அவளது மனத்தை வருத்திப் புண்படுத்தின; விஷயம் இன்னதென்பதை உடனே வெளியிடா மல், கல்யாணியம்மாள் வளர்த்துப் பேசப் பேச கண்மணியம் மாளது மனம் கட்டிலடங்காத பெருத்த ஆவலினால் புண்பட்டு வேதனைக் கடலில் ஆழ்ந்து தவித்தது. நிற்க, தனது அத்தை தனது பங்களாவில் முதல் நாள் நிகழ்ந்த சம்பவத்தை வெளியிட மாட்டாள் என்று தான் நினைத்ததற்கு மாறாக அவளும் அதைத் தெரிவிக்கத் தொடங்கியதைக் காணவே, கண்மணியம்மாளது நிலைமை பரம சங்கடமானதாக ஆய்விட்டது. அதனால் அவளது மனமும், மெய்யும் வெட்கத்தினாலும், துக்கத்தினாலும் குன்றிப் போய்விட்டன. இருந்தாலும் அவள் தனது வதனத்தை அப்புறம் திருப்பி இருந்தமையால் அவளது துன்பகரமான நிலைமையை மற்றவர் இருவரும் அவ்வளவாக கவனிக்கவில்லை.

அப்போது கல்யாணியம்மாளது மனதில் உற்சாகமும் ஒரு வகையான மகிழ்ச்சியும் உண்டாயின. ஏனெனில், அவள் அங்கே வந்த போது, தனது கட்டுக் கதையை மீனாகூஜியம்மாள் நம்பு வாளோ மாட்டாளோ என்ற பெருத்த கவலையோடு வந்தவள் ஆதலால், மீனாகூஜியம்மாளே அவன் மீது குற்றம் சுமத்தியதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/206&oldid=649650" இலிருந்து மீள்விக்கப்பட்டது