பக்கம்:மதன கல்யாணி-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 191

ஒவ்வொரு நாளும் அவன் வந்து போகும் போது, “நான் போய் விட்டு வருகிறேன்” என்று என்னிடம் சொல்லிக் கொள்ளுவான். நான், சரி என்பேன். அதைத் தவிர அவனிடத்தில் நான் வேறே வார்த்தையே வைத்துக் கொண்டதில்லை; அவனுடைய முகத்தை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அப்படி இருக்க, அவனுக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி உண்டாயிற்று என்பது தெரிய வில்லை” என்று பெருத்த பீடிகை போடத் தொடங்கினாள்.

அதைக் கேட்ட மீனாகூஜியம்மாள், “சரி; நீங்கள் சொல்வதில் இருந்து, விஷயம் இன்னதென்பது அநேகமாகத் தெரிந்து போய் விட்டது. ஆனால், காரியம் இப்படியும் நடக்குமா என்பதே எனக்கு முழுதும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று வியப்போடு கூறினாள். கல்யாணியம்மாள், “நேற்று சாயுங்காலம் ஏழரை மணிக்கு அப்படியே நடந்தது” என்று மிகவும் அழுத்தமாகவும் உறுதியாகவும் மறுமொழி கூறினாள்.

அந்தப் பெண்டீர் இருவரும் பேசிய வார்த்தைகள் கண்மணி யம்மாளது மனத்தை ஆயிரம் வாள்கள் கொண்டு அறுப்பது போல இருந்தன. அவள் சகிக்க ஒண்ணா வேதனையால் தவித்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள். கல்யாணியம்மாளும் அவளது நிலைமையை அறிந்து கொண்டதன்றி, அவற்றிலிருந்து மதனகோ பாலனுக்கும் கண்மணிக்கும் அந்தரங்கமான காதல் ஏற்பட்டிருக் கிறது என்று எளிதில் உணர்ந்து கொண்டாள்; ஆதலால் விஷயத்தை எடுத்து விரிவாக உடனே சொல்லி விடாமல் மறைத்து மறைத்துப் பேசி, கண்மணியைச் சித்திரவதை செய்யத் தொடங்கினாள். ஏனெனில், தனக்கு மருமகளாக வரிக்கப்பட்ட அவள் வேறொருவன் மீது ஆசை கொண்டாளே என்பதனால் உண்டான பதைபதைப்பும், தான் அவன் மீது கபடமற்ற பிரேமை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்ள விரும்பியதை மறுத்துத் தன்னை வெறுத்த மதனகோபாலன். அவள் மீது தவறான விருப்பங் கொண்டானே என்ற பொறாமையும் ஒன்றுகூடி எழுந்து கல்யாணியம்மாளது மனதில் சான்னித்தியம் செய்தன ஆதலால், அவள் விஷயத்தைச் சொல்லாமலே மறைத்துப் பேசிப் பேசி, கண்மணியம்மாளைக் கொன்று கொண்டே இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/209&oldid=649653" இலிருந்து மீள்விக்கப்பட்டது