பக்கம்:மதன கல்யாணி-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3

அவள் தனது வாயைத் திறந்த போதெல்லாம் வலது கன்னம் அழகாகக் குழிந்து அவன் மேம்பட்ட சுகபோகங்களுக்கு உரியவள் என்று ஓயாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது. தங்கப் பதுமையைப் போலிருந்த அந்த உன்னத மடந்தையின் எந்த அங்கத்தை நோக்கினாலும், மனம் தெவிட்டாமல் அதை விட்டு வேறொன்றிற் செல்ல மாட்டாமல் பிரமித்து அப்படியப் படியே அந்த அழகில் ஈடுபட்டு மயங்கி நின்றது. அவளது முடி முதல் அடிவரையில் உள்ள எந்தப் பாகத்தைப் பார்த்தாலும் அற்புதமான அழகு ஜ்வலித்துக் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இன்பத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. மிருதுத் தன்மையும், கற்பின் உறுதியும், பெருந்தன்மையும், நற்குல ஒழுக்கமும், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் பெண்டீர் தன்மைகளும் சுடர்விட்டு ஒளிர்ந்த ஒளிர்ந்த அருங்குண மணியான அப்பெண் பாவையைக் கண்ட மாத்திரத்தில், உலகைத் துறந்த தபசிகளும் கலக்கம் அடைந்து “சுவர்க்க லோகமே பெண்ணுருவாகத் தோன்றி இவ்வுலகில் இருக்கையில் வீணிலே உலகைத் துறந்து விட்டோமே” என்று வருந்தத் தக்க சிறப்பு வாய்ந்தவளாக இருந்தாள்.

இத்தகைய ரூபலாவண்ணியம் பொருந்திய நங்கைக்கு அவளது பெற்றோர் கண்மணியம்மாள் என்று பெயர் சூட்டியது முற்றிலும் பொருந்தும் அல்லவா. அந்த அழகிய மடமங்கை கிருஷ்ணாபுரம் சமஸ்தானத்து ஜெமீந்தாரது தம்பியின் தம்பியின் புதல்வி; குழந்தைப் பருவத்திலேயே தாய் தகப்பன்மாரை இழந்தவள்: தந்தையோடு பிறந்த அத்தையினால் மிகவும் அருமையாக வளர்க்கப்பட்டவள். மீனாகூஜியம்மாள் என்று பெயர் பூண்ட அந்த அத்தையே, முன் கூறப்பட்டபடி சாய்மான நாற்காலியில் புஸ்தகம் படித்திருந்தவள்; மீனாகூ அம்மாளுக்கு இறந்து போன தனது கணவனது நிலங்களில் இருந்து வருஷம் ஒன்றுக்குப் பதினாயிரம் ரூபாய் வருமானம் வந்துக் கொண்டிருந்தது. அவளுக்குச் சந்தானமில்லாமற் போனமையால், அவள் கண்மணி அம்மாளையும் அவளுக்கு முன் பிறந்தவனான துரைராஜா என்றவனையும் தனது சொந்த மக்களைப் போல அன்பும் ஆதரவும் சுரக்க, செல்வமாகவும் சிறப்பாகவும் வளர்த்து வந்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/21&oldid=649654" இலிருந்து மீள்விக்கப்பட்டது