பக்கம்:மதன கல்யாணி-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மதன கல்யாணி

மீனாகூஜியம்மாள், “ஒகோ குதிரை கீழே தள்ளியதுமன்றி புதைப்பதற்குக் குழியும் தோண்டியது என்பார்கள். அது போல, அவன் இந்த அயோக்கியமான காரியம் செய்ததுமல்லாமல், தான் உங்களுக்கு ஏதோ தீங்கு செய்வதாகவும் சொல்லிவிட்டா போனான் சங்கதி நன்றாக இருக்கிறது!” என்றாள்.

கல்யாணியம்மாள், “அதனால் தான், அற்ப சகவாசம் பிரான சங்கடம் என்ற பழமொழி சொல்லுகிறார்கள். அவனிடம் பெரும் புத்தி இருந்தால், அவன் இந்தத் தவறையே செய்திருக்க மாட்டான். ஏதோ அறியாமையினால் தவறு செய்து விட்டாலும், அப்படிப் பட்ட மனிதன் அதைப்பற்றி விசனப்பட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்வான். தான் பிழையும் செய்துவிட்டு, அந்தப் பிழைக்குப் பிறர் இணங்கி வராவிட்டால் அதற்காக மேலும் பழிக்குப்பழி வாங்க நினைப்பது கேவலம் அதமாதமர்கள் செய்யும் காரிய மல்லவா, இந்த மதனகோபாலன் அந்த ஜாப்தாவில் சேர்ந்தவன் தானே” என்றாள்.

மீனாகூஜியம்மாள், ‘கேவலமான இந்த ஏழைப் பையன் பார்த்து நம்மை என்ன செய்யக் கிடக்கிறது? இது சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிற மாதிரித்தான். உங்களுடைய யோக்கியதை என்ன! செல்வாக்கென்ன்! பெருமையென்ன! புருஷர் இறந்து போய் சுமார் 15-வருவடி காலமாகிறது. எவ்வளவு பரிசுத்தமான நடத்தை யோடு நீங்கள் காலந்தள்ளி வந்திருக்கிறீர்கள். உங்களைப் பற்றி எப்படிப்பட்ட அவதூறான வார்த்தையையும் எவராகிலும் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னாலும் எவராகிலும் அதை நம்புவார்களா? அப்படி இருக்க, இந்த அற்ப நாய் என்ன செய்யப் போகிறது? அவனால் ஆனதைச் செய்து கொள்ளட்டும். அவன் செய்த காரியத்தை நாம் நம்முடைய தனிதர்களிடம் எல்லாம் வெளியிட்டு விட்டால், அவன் வீணை கற்றுக் கொடுக்கும் போது ஒவ்வோரிடத்திலும் துடைப்பக்கட்டைப் பிரயோகம் செய்து அவனை வெளியில் விரட்டிவிடப் போகிறார்கள். அதன் பிறகு அவன் சோற்றுக்கே திண்டாடப் போகிறான். அப்போதல்லவா தன்னுடைய உண்மையான யோக்கியதையும் மதிப்பும் எவ்வள வென்பது அவனுக்குத் தெரியப் போகிறது” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/214&oldid=649659" இலிருந்து மீள்விக்கப்பட்டது