பக்கம்:மதன கல்யாணி-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மதன கல்யாணி

தொடர்ச்சியாக மூன்று மாதகாலம் இருந்தால், அவன் புதுமனிதன் ஆகிவிடுகிறான். அவன் கெட்டுப் போகிறதற்கு எத்தனையோ மார்க்கங்களும், இடங்களும், சந்தர்ப்பங்களும் ஒவ்வொரு தெருவிலும் இருக்கின்றன. அதிலும், சிறுபிள்ளைகளாய் இருந்து, அவர்களுக்குப் பணமும் அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருந்தால், அவர்களைப் பலவகையான துன்மார்க்கங்களில் கொண்டு போய் நுழைத்துவிட்டு அடியோடு கவிழ்த்துவிட, எத்தனையோ அயோக்கியர்கள் நண்பர்களாக ஏற்பட்டுவிடுகிறார்கள். இதோ இந்த மதனகோபாலனையே நீங்கள் திருஷ்டாந்தமாகப் பார்த்துக் கொள்ளலாம். அவன் இந்த ஊருக்கு வந்தபோது, எவ்வளவு நற்குண நல்லொழுக்கம் உடையவனாக இருந்தான்! இந்தச் சொற்ப காலத்துக்குள் எப்படி மாறிவிட்டான் பார்த்தீர்கள் அல்லவா! அவன் இப்படி மாறியது அவனுடைய குற்றமல்ல; அது இந்தப் பட்டணத்து மண்ணின் குணம்; இவைகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் பார்க்க, என்னுடைய மனதில் ஒரு பெருத்த கவலை இன்றைக்குத் தான் உண்டாயிற்று, நம்முடைய மைனர் பையன் பலரிடத்தில் சிநேகம் வைத்துக் கொண்டு, நாடகம் முதலிய பல இடங்களுக்கும் நினைத்தபடி போய்க் கொண்டிருக்கிறேனே! அவனும் இப்படி துன்மார்க்கங்களில் இறங்கிவிட்டால், அதனால், அவமானமும், துன்பங்களும், வியாதிகளும், இன்னும் பலவகை யான உடத்திரவங்களும் சம்பவித்து விடுமே என்ற நினைவு என் மனதை வதைக்க ஆரம்பித்து விட்டது. இறந்து போன என்னுடைய எஜமானர் மரணாந்த சாஸ்னத்தில் எழுதிவைத்திருக் கிறபடி செய்வதானால், அவனுடைய கலியானத்தை இன்னம் ஒரு வருஷகாலம் நிறுத்த வேண்டியிருக்கிறது. நீங்கள் என்னைக் கேட்டு, நான் இந்தக் கலியாணத்துக்கு இணங்கிய போது, அதை உத்தேசித்தே கலியானத்தை அடுத்த வருஷம் செய்வதாக நாம் தீர்மானித்திருந்தோம், இப்போது நம்முடைய கண்ணுக்கு முன் நடக்கும் விநோதமான சம்பவங்களைப் பார்க்கவும், பைய னுடைய நடத்தைகளைக் கவனிக்கவும், என்னுடைய உறுதியே மாறி விட்டது தவிர இன்று பையன் என்னோடு பேசிய சில வார்த்தைகளில் இருந்து, அவன் கலியாணத்தைச் சீக்கிரம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என்பதும் தெரிந்தது. அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/218&oldid=649665" இலிருந்து மீள்விக்கப்பட்டது