பக்கம்:மதன கல்யாணி-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 201

மனதுக்கு விரோதமாக, ஒரு வருஷகாலம் இதை நாம் தாமதப் படுத்தினால், பையனுடைய புத்தி எப்படி இருக்குமோ இந்த நீண்ட காலத்தில் அவனுக்கு யார் யாருடைய சிநேகம் ஏற்படுமோ, பிறகு இந்தக் கலியாணம் வேண்டாம் என்று அவன் சொன்னாலும் சொல்லி விடுவான்; ஆகையால் கலியானத்தை இப்போதே நடத்தி விட்டால், பையன் கெட்ட வழியில் போகாமல் இருப்பதற்கு அது ஒரு தடையாக இருப்பதன்றி, அவன் ஆசைப்படும் போது அந்த ஆசையைப் பூர்த்தி செய்ததாகவும் இருக்கும். அவனுடைய மனம் முறிந்து போன பிறகு செய்வதைவிட அவன் ஆசைப்படும் போது செய்தால், இவர்கள் இருவருக்கும் அதிக ஒற்றுமையும், பரஸ்பரம் பிரேமையும் மனதுக்கு எப்படி இருக்குமோ? உங்களோடு கலந்து பேசி இதை முடித்துக் கொண்டு போகவே வந்தேன்” என்றாள்.

அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட மீனாகூஜியம்மாள், மிகுந்த மகிழ்ச்சியும் புன்னகையும் காட்டி, “நான் என் மனதுக் குள்ளேயும் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தேன். ஆனால், நீங்கள் உங்களுடைய எஜமானரின் உத்தரவுப்படியே இதை நடத்த வேண்டும் என்று சொன்னதைக் கருதி, நான் உங்களை வற்புறுத்தவில்லை. உங்கள் இஷ்டம் எதுவோ அது போல நான் எந்த விஷயத்திலும் நடக்கத் தயாராகக் காத்திருக்கிறேன். இந்தக் குழந்தையை நான் ஆயிரம் பாடுபட்டு கிளிபோல மகா அருமை யாக வளர்த்து வந்திருக்கிறேன். உங்களுடைய இரண்டு பெண் குழந்தைகளோடு மூன்றாவது குழந்தையாக இவளையும் நீங்கள் பாவித்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இனி உங்களுடை யது. குழந்தை மகா நற்குணவதி. வீட்டில் உள்ள பெரியோர்களது மனம் கோணாமலும், ஒரு வார்த்தையும் அதிர்ந்து பேசாமலும் மகா புத்திசாலித்தனமாக நடந்து கொள்வாள். எந்த தினத்தில் கலியாணத்தை நீங்கள் வைத்துக் கொண்டாலும், அது எனக்கு சந்தோஷம். குழந்தைக்கும் இது சரியான பக்குவகாலம். சரியான காலத்தில் இவள் தன்னுடைய புருஷனை அடைந்து சந்தோஷப் பட்டு வாழவேண்டும். நான் இவ்வளவு காலமும் வளர்த்ததற்கு, நான் இவளுக்குக் கொடுத்தனுப்ப என்னிடம் பெருத்த ஐசுவரியம் இல்லாவிட்டாலும், பெருத்த ஐசுவரியமிருக்கும் இடத்திலாவது இவளைக் கட்டிக் கொடுத்துவிட்டுப் போனால், என்னுடைய மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/219&oldid=649667" இலிருந்து மீள்விக்கப்பட்டது