பக்கம்:மதன கல்யாணி-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 203

நாம் எதையும் செய்தோம் என்ற தவறும் அவ்வளவாக ஏற்படாது. அவர்களுடைய இந்த வருஷத்து திதி இன்றைக்குப் பதினைந்தாம் நாள் வருகிறதென்பதைச் சொல்லிவிட்டுப் போவதற்காக புரோகிதர் நேற்றைக்கு முந்திய நாள் பங்களாவுக்கு வந்திருந்தார். அந்தச் சமயத்தில் அவரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது, நாளைய தினம் முகூர்த்த நாளென்றும், நாளைக்கு இரவில் மாத்திரம் இந்த ஊரில் பத்து வீடுகளில் கலியாணம் செய்து வைக்க அவர் போக வேண்டும் என்றும் சொன்னதாக, எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், நாம் நாளைய இரவில், எல்லோரையும் அழைத்து விருந்து செய்து நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொள்வோம். இன்னம் ஒரு வாரத்தில் ஏதாகிலும் முகூர்த்த நாளிருந்தால், அதில் கலியாணத்தை முடித்து விடுவோம்” என்று மிகுந்த மகிழ்ச்சி யோடும், உற்சாகத்தோடும் கூறிய வண்ணம் கண்மணியை நோக்கினாள்.

அப்போது கண்மணி எவ்விதமான நிலைமையில் இருந்தாள் என்பதை எடுத்துச் சொல்வதைவிட யூகித்துக் கொள்வதே தக்க தாகும். மரண தண்டனை விதிக்கப் பெற்ற ஒருவன் துக்கு மேடையின் மீது ஏறும் போது என்ன பாடுபடுவானோ அதைக் காட்டிலும் கோடிமடங்கு அதிகமாக அந்தப் பெண்மணி வாதைப் பட்டு தனது சரீரம் மண்ணிலிருந்ததோ விண்ணிலிருந்ததோ என்பதை உணர்மாட்டாமல், மதிமயங்கி, திக்பிரமை கொண்டு, உணர்வு கலங்கி, உயிரழிந்து சித்திரப் பாவை போல அசைவற்று உட்கார்ந்திருந்தாள். பரமயோக்கியன் என்று மிகவும் உறுதியாக தான் எண்ணியிருந்த மதனகோபாலன் கல்யாணி யம்மாளிடத்தில், காமாதுரனாக நடந்து கொண்டான் என்ற செய்தியும் தனக்கும் மைனருக்கும் அதிசீக்கிரத்தில் கலியாணம் ஆகப் போகிறதென்ற செய்தியும், மறுநாள் இரவில் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்ற செய்தியும், மூன்று பெருத்த இடிகள் போல அவளது மனத் தைத் தாக்கவே, வேடனது கூரிய அம்பு பாய்ந்து ஊடுருவிச் செல் வதனால், உயிரிழந்து விழும் மணிப்புறாவைப் போலவும், உயிரற்ற ஒவியம் போலவும், நெருப்புத் தனல்களுக்குள் புதையுண்டு கிடப்பவள் போலவும், அவள் வேதனையே நிறைவாக உட்கார்ந்திருந்தாள். அவளது மனம், எண்ணாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/221&oldid=649672" இலிருந்து மீள்விக்கப்பட்டது