பக்கம்:மதன கல்யாணி-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 205

அடைந்தவளாய், “சரி, அப்படியே செய்யலாம்; நாளைக்கு இரவில் ஒன்பது ஒன்பதரை மணிக்குள் விருந்தை முடித்துக் கொண்டு, பத்து மணிக்குள் நிச்சயதார்த்தத்தை நடத்தி விடுவோம். ஏன்? நாம் இன்னொரு காரியம் செய்தால் என்ன? இப்போது நாம் நம்முடைய பந்துக்களுடைய பங்களாக்களுக்கும், சிநேகிதர் களுடைய பங்களாக்களுக்கும் போகிறோமே; நாளை இரவில் நடக்கும் விருந்துக்கும் நிச்சயதார்த்தத்துக்கும் வரும்படி எல்லோரையும் நேரில் அழைத்துவிட்டு வருவோமே. இன்னொரு முறை போவதற்கு நமக்கு அவகாசம் எங்கே இருக்கிறது” என்றாள். கல்யாணியம்மாள், “அதுவும் நல்ல யோசனைதான். அப்படியே செய்வோம். அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது; நாம், இந்த மதனகோபாலனுடைய விஷயத்திற்காக மாத்திரம் வந்தோம் என்று பிறர் நினைப்பது நமது யோக்கியதைக்கும் கண்ணியத்துக்கும் தக்ாத காரியம். அவர்களை அழைக்கப் போனது போலப் போய் இந்த விஷயத்தையும் நடுவில் மெதுவாகத் தெரிவித்து விடுவோம்” என்றாள்.

மீனாகூஜியம்மாள், “ஆம் நிஜந்தான் நாம் அப்படிச் செய்தால், அந்த விஷயத்தில், எல்லோருக்கும் நம்பிக்கை அதிகமாக ஏற்படும். நம்முடைய வேலையும் சுலபமாக முடிந்து போகும்” என்றாள். அவ்வாறு அவர்கள் இருவரும் தீர்மானம் செய்து கொண்டவர் களிய், தங்களது ஆசனங்களை விட்டு எழுந்தனர். மீனாகூஜியம் மாள் போய் அதி சீக்கிரத்தில் திரும்பி வருவதாகவும், அது வரையில் ஜாக்கிரதையாக இருக்கவும் கண்மணியிடம் கூற, அதன் பின் இருவரும் மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கினார்கள். கீழே இருந்த வேலைக்காரி ஒருத்தியை அழைத்து மேன்மாடத்தில் உள்ள கண்மணிக்குத் துணையாய் இருக்க அவளை மேலே அனுப்பி விட்டு மீனாகூஜியம்மாள் பெட்டி வண்டிக்குள் ஏறி உட்கார, கல்யாணியம்மாளும் தான் எதிர்பாராத வெற்றி தனக்கு உண்டாவதை நினைத்து நினைத்து உள்ளார்ந்த குதுகலம் கொண்டவளாய் வண்டியில் ஏறி உட்கார, வண்டி புறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/223&oldid=649676" இலிருந்து மீள்விக்கப்பட்டது