பக்கம்:மதன கல்யாணி-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 ;

வந்தோம். அதன்பிறகு நான் நம்முடைய சிவஞான முதலியாரையும், சோமநாதபுரம் ஜெமீந்தாரையும் பார்த்துவிட்டு வர இந்நேரம் ஆகிவிட்டது” என்றாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட கோமளவல்லியின் கபடமற்ற அதி சுந்தரவதனம் பெருங்களிப்பினால் தாமரை மலர் போல மலர்ந்தது. கண்கள் இரண்டும் ஆனந்தக் தாண்டவம் புரிந்தன. அவ்வாறே, துரைஸானியம்மாளும் கலியாணம் அதிசீக்கிரமாக நடக்கப் போவது பற்றி பெருமகிழ்ச்சி அடைந்தாளேனும், மதனகோபாலனைப் பற்றி தங்களது தாய் வெளியிட்ட வரலாற்றைக் கேட்டதனால் ஏற்பட்ட பெருத்த வியப்பும் திகைப்பும் அப்போது அவளது மனதில் நின்று மிகுந்த சஞ்சலமும் சந்தேகமும் உண்டாக்கிக் கொண்டிருந்தமையால், அவள் கலியாணத்தைப் பற்றிய சந்தோ ஷத்தை அவ்வளவாக வெளியிடவில்லை. மகா கூர்மையான அவளது மனம் பலவகையில் யூகங்கள் செய்து கொண்டிருந்தது. அவள் கடைசியாக கோமளவல்லியை நோக்கிய வண்ணம், “சரி; இப்போது தான் நம்முடைய சந்தேகம் நிவர்த்தி ஆயிற்று. இதற்கு முன் நம்முடைய பங்களாவில் நடந்த விசேஷங்களுக்கெல்லாம் ஜனங்களை அழைக்க அம்மாளே நேரில் போகாமல் இதற்கு மாத்திரம் போன காரணம் என்னவென்று நீ சந்தேகப்படுவதாக உன்னுடைய முகம் காட்டுகிறது. அந்த மதன கோபாலனுடைய அயோக்கியத்தனத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய வீடுகளிலும் அவன் வராமல் செய்ய வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் அம்மாளும் மீனாகூஜியம்மாளும் நேரில் போய்விட்டு வந்திருக்கிறார்கள்; இல்லாவிட்டால் இவ்வளவு நேரம் தாமதம் ஆக என்ன காரணம் இருக்கிறது. இந்த விஷயத்தை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவனை நான் கிருஷ்ண பகவான் என்றே நினைக்கிறேன். அவர் பதினாயிரம் கோபிகாஸ்திரிகளை விரட்டி அடித்ததைப் போல இந்த மதனகோபாலன் இத்தனை வீட்டுப் பெண் பிள்ளைகளின் மேலும் துராசை கொண்டு அவர்களை எல்லாம் பிடித்திழுத் திருக்கிறான். பெரிய பெரிய மனிதர்களாகிய இத்தனை சீமாட்டிகள் அவன் அயோக்கியன் என்று நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/229&oldid=649686" இலிருந்து மீள்விக்கப்பட்டது