பக்கம்:மதன கல்யாணி-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213

கண்டவள் ஆதலால், அவளிடத்தில் தான் அதிகமான பேச்சை வளர்த்தால், தனக்கே அவமானம் ஏற்படும் என்பதை எண்ணி மெளனம் கலகம் நாஸ்தி என்று பேசாதிருந்தாள். துரைஸானியம் மாளது உள் கருத்தை சிறிதும் உணராதவளும் கபடமற்றவளு மான கோமளவல்லி, தனது அக்காளை நோக்கி, “அம்மாள் இவ்வளவு நேரம் வரவில்லையே, என்று நாம் இதுவரையிலும் கவலைப்பட்டிருந்ததற்கு அவர்கள் கடைசியில், எப்படிப்பட்ட சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்தார்கள் பார்த்தாயா? நாளைக்கு நிச்சயதாம்பூலம் என்பதைக் கேட்க, என்னுடைய உடம்பு அப்படியே பூரித்துப் போகிறது. என் மனம் வேறே எதிலும் செல்லாமல் சந்தோஷத்தினால் பொங்குகிறது. என்னுடைய பசிகூட அடங்கிவிட்டது” என்று மிகுந்த மன எழுச்சியும் களிப்பும் அடைந்தவளாகக் கூறினாள். அதைக் கேட்ட துரைஸானியம்மாள், “அப்படியானால், நீ அதிர்ஷ்டசாலிதான். என்னுடைய மனதிலோ ஒருவிதமான உணர்வும் ஏற்படவில்லை” என்றாள். கோமளவல்லி, “ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? கண்மணியம்மாள் நம்முடைய பங்களாவுக்கு வரப்போகிறாள் என்ற சந்தோஷ சங்கதியை அம்மாள் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி இருக்க, நீ உன் மனதில் சந்தோஷம் உண்டாகவில்லை என்று சொல்லுகிறாயே!

அது நியாயமா?” என்றாள்.

துரைஸானியம்மாள், “அம்மாள் துக்கத்தையும் சந்தோஷத்தை யும் கலந்து கொண்டு வந்திருக்கிறார்கள் அல்லவா. அபூர்வமான நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவனும் சிறந்த வீணை வித்துவானு மான மதனகோபாலனையும், அவனிடம் வீணை கற்றுக் கொள்ளும் பாக்கியத்தையும் நாம் இழப்பதனால் உண்டாகும் விசனமும், கண்மணியம்மாள் வருகிற சந்தோஷமும் ஒன்றை ஒன்று கொன்று விட்டன. அருமையான ஒரு பொருளை இழந்தோம்; அருமையான இன்னொரு பொருள் வரப்போகிறது. ஆகையால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. ஒரே காலத்தில் சந்தோஷமும் விசனமும் எப்படி உண்டாகும்? ஆகையால் என் மனதில் எவ்வித உணர்ச்சியும் ஏற்படவில்லை. கண்மணியம்மாள் நாளைக்கு வராவிட்டால், இன்னம் ஒரு வருஷம் கழித்தாகிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/231&oldid=649692" இலிருந்து மீள்விக்கப்பட்டது