பக்கம்:மதன கல்யாணி-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மதன கல்யாணி

உடாக்கியே! நேத்து ராத்திரியே ஒம்மவன் செத்திருந்தா இந்நேரம் அம்மா பட்ற பாடு தெரிஞ்சிருக்கும். வங்களா கிங்களா, செமீன் கிமீன் எல்லாம் அடியோடே கோயிந்தான்னு போயிருக்கும்; இந்தக் கருப்பாயியாலே ஒம்மவன் தப்பினான்” என்றாள்.

அந்த வார்த்தையைக் கேட்டவுடனே கல்யாணியம்மாளது தேகம் பதறியது. அவள் பெரிதும் வியப்பும் திகைப்பும் அடைந்தவளாய், “என் மகனுடைய உயிரையா காப்பாற்றினாய்? எப்போது? அவன் எங்கே வந்தான்? அவனுடைய உயிருக்கு என்ன அபாயம் வந்தது? நீ எப்படிக் காப்பாற்றினாய்? அவன் இப்போது எங்கே இருக்கிறான்? சீக்கிரமாகத் தெரிவி” என்று மிகுந்த ஆவலோடு கேட்க, அம்பட்டக் கருப்பாயி, “எங்க ஆட்டுக்குப் பக்கத்துலே ஆலந்துருப் பாட்டே மேலே ஒரு வங்களா இருக்குது. அதுலே ஒரு நாடவக்காரப் பொண்ணு இருக்கறா. ஒம்மவனுக்கு அவமேலே பிரியமாங்காட்டியும். அவன் என்னா சேஞ்சான், நேத்துப் பகல்லே அவன் வேவற வெய்யில்லே ஊரெல்லாம் திரிஞ்சுப்புட்டு, வேத்து விருவிருத்து எங்க ஆட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் இன்னான்னு எனக்கு அப்ப தெரியல்லே. நீ யாரப்பா? எங்கனே வந்தேன்னு கேட்டேன். அவன் அந்த நாடவக்காரியெப் பத்தின சங்கதி எல்லாம் அறிஞ்சு சொன்னா எனக்கு எனாம் தாறென்று சொன்னான்; தான் ஒரு செமீந்தாரு வீட்டுப் புள்ளே இன்னும் சொன்னான். சரி, அப்படியே ஆவட்டும்; சாயந்தரம் வாடாப்பா இன்னு நான் சொல்லி அனுப்பினேன். அந்த மாதிரியே பையன் நேத்து ராத்திரி எங்க வூட்டுக்க வந்து சேர்ந்தான். அப்பவும் அவன் யாருன்னு எனக்குத் தெரியலே. அந்த வங்களாவுலே வாசப் ‘பெருக்கறவளே எனக்குத் தெரியும்; அவளெக் கேட்டுப் பார்க்கலாம்: இஞ்சேயே படுத்திருன்னு சொல்லிப்புட்டு நான் போயித்தேன். பையன் காதுலே வைரக் கடுக்கன், வெரல்ெலாம் வைர மோதரம், கையிலே நாலாயிரம் அஞ்சாயிரம் ரூபா நோட்டு எல்லாம் வைத்திருந்தானாங் காட்டியும்; அவன் அலஞ்சி திரிஞ்ச காலத்துலே அதை ஆரோ எப்பிடியோபாத்துப்புட்டாங்க போலே இருக்குது; நான் ராத்திரி 12-மணிக்கு வூட்டுக்கு வந்து பார்க்கறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/238&oldid=649704" இலிருந்து மீள்விக்கப்பட்டது