பக்கம்:மதன கல்யாணி-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மதன கல்யாணி

போயி வாங்கியாந்து தாறேன். நீ இன்னமே அந்த பையனுக் கிட்டப் போவதே” இன்னு கெஞ்தா தெல்லாம் கெஞ்ச, அவன் ஆறாயிரம் ரூவா நாளெ சாயந்தரம் கொண்டாந்து வைக்காமெப் போனா, என்னெயும் ஒம்மவனெயும் கொன்னுப்புடுவேனுன்னு சொல்லி, அவுங்க கொலெ தெய்வத்து மேலே ஆணெ வச்சுப்புட்டுப் போயிருக்கறான். அதுக்காவத்தான் நான் வந்தேன். இன்னெக்கிப் பகலு நேரத்துலே வந்தா ஆராச்சும் என்னமாச்சும் நெனெச்சுகு வாங்கன்னு, இப்ப இருட்டுலே வந்தேன். நாளெ சாயந்தரம் நான் அவங்கிட்டப் பணத்தெச் சேக்கணும்; இல்லாமெப் போனா நானும் ஒளிஞ்சேன், ஒம்மவனையும் நீ அப்பாலெ பாக்க முடியாது. ஒனக்குப் பிரியமானா பனங்குடு; இல்லாமெப் போனா அதெயும் சொல்லிப்புடு; நான் போறேன்” என்றாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட கல்யாணியம்மாள் வியப்பும் திகைப்பும் விசனமும் கொண்டவளாய் என்ன செய்வதென்பதை உணராமல் கீழே குனிந்து இரண்டொரு நிமிஷ நேரம் சிந்தனை செய்த பின்னர் நிமிர்ந்து, “நீ சொல்வதெல்லாம் சரிதான். இப்போது என்னுடைய பையன் எங்கே இருக்கிறான்?” என்றாள். உடனே கருப்பாயி வியப்படைந்து “அவன் இஞ்சே இன்னம் வரலியா? நேத்து ராத்திரி எங்க வூட்டிலிருந்து தப்பிச்சு ஒடியாந்தவனெ நான் அப்பாலெ பாக்கவே இல்லை. அவன் இஞ்சே வந்திருப்பானல்ல நெனெச்சேன்” என்றாள். கல்யாணியம்மாள் பெரிதும் கவலை கொண்டு, ‘நேற்று சாயுங்காலம் போன பையன் இன்னமும் பங்களாவுக்கே வரவில்லையே! அவன் எங்கே போயிருப்பான்? ஒரு வேளை அந்தத் திருடர், அதற்குப் பிறகு, அவனைக் கண்டு பிடித்து ஏதாகிலும் தொந்தரவு செய்திருப்பார்களோ என்னவோ தெரியவில்லையே!” என்று கூறினாள். அதைக் கேட்ட கருப்பாயி, “அப்பிடி இருக்காது; அந்தத் திருடன் பணத்துக்கு ஆசெப் பட்டவன். நான் பணம் குடுக்கறேனுன்னு சொல்லியிருக்கச்சே, பையனெ என்னாத்துக்கு அவன் தொந்தரை செய்யறான். பையன் வேறே எந்தத் தேவிடியா வூட்டுலே படுத்துக் கெடக்கறானோ; அவனுக்கே சலிச்சுப் போனா, இன்னக்கி ராத்திரி

யாச்சும் காலமேயாச்சும் வந்துற மாட்டானா, அப்பிடியானா, நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/240&oldid=649710" இலிருந்து மீள்விக்கப்பட்டது