பக்கம்:மதன கல்யாணி-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223

பணங்குடுக்க மாட்டியா? எனக்கு நேரமாவுது. நான் அவசரமாப் போவணும். நொம்ப அவசரம்” என்று நெருப்பின் மேற் நிற்பவள் போல மிகவும் தவிப்பாகக் கூறினாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகவும் சலிப்பாக, “ஆகா! நமக்கு நல்ல பிள்ளை வந்து வாய்த்தான்! அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை அவனால் இன்னும் என்னென்ன மானக்கேடு வரப் போகிறதோ தெரியவில்லையே! ஊரில் இருக்கும் பிள்ளை எல்லாம் அன்னியப் பெண்பிள்ளை கையைப் பிடித்து இழுத் தாலும், அதற்கு இனங்காமல் பயந்து ஒடுகிறது. நம்முடைய பிள்ளை எந்த எலிப்பாழியில் எந்தத் தேவடியாள் ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்று அலைந்து திண்டாடி எல்லோரையும் சந்தியில் இழுத்துவிடுகிறது. இதெல்லாம் என்னுடைய தலை எழுத்து” என்று மிகுந்த வெறுப்போடும் விசனத்தோடும் தனக்குத் தானே வெளிப்படையாகக் கூறிய வண்ணம் மெதுவாக எழுந்து, அருகில் இருந்த இரும்புப் பெட்டியண்டை போய் அதன் கதவைத் திறந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ஆறு நோட்டு களை எடுத்து வந்து, கருப்பாயிடம் கொடுத்து, “இந்தா இதோ இருக்கிறது ஆறாயிரம் ரூபாய்; எடுத்துக் கொண்டு போய்க்கொடு. அவன் பையனுக்கு எப்படிப்பட்ட துன்பமும் செய்யாமல் பார்த்துக் கொள். நீ என்னோடு பழகிய பழைய மனுவியாயிற்றே என்று உன்னுடைய சொல்லை நிஜம் என்று நம்பி நான் இவ்வளவு பெருத்த தொகையை உடனே கொடுக்கிறேன். நீ பொய் சொல்லி இதை என்னிடத்திலிருந்து அபகரித்துக் கொண்டு போனதாக பின்னால் எனக்குச் சங்கதி தெரியுமானால், நான் உன்னை லேசில் விடமாட்டேன்; அந்தத் திருடனுக்கு நானே இன்னம் எவ்வளவு பெருத்த பணத்தொகை வேண்டுமானாலும் கொடுத்து உன்னை சித்திரவதை செய்து உயிரோடே புதைத்து விடச் சொல்லுவேன். நான் முட்டாள் என்றும் என்னை இப்படி அடிக்கடி ஏமாற்றலாம் என்றும் நினைத்துக் கொள்ளாதே; சரி; நோட்டை எண்ணிக் கொண்டாயா? ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு: ஆறு நோட்டு இருக்கிறது. வேறே யாராவது பார்க்கப் போகிறார்கள் நீயும் அவசரமாகப் போக வேண்டும் என்கிறாய்; நீ போய்விட்டு இன்னொரு சமயம் வா” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/241&oldid=649711" இலிருந்து மீள்விக்கப்பட்டது