பக்கம்:மதன கல்யாணி-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மதன கல்யாணி

அவளால் கொடுக்கப்பட்ட நோட்டுகளை வாங்கி மடித்து தனது சேலைத் தலைப்பில் முடிந்து கொண்ட கருப்பாயி, “பையனைக் காப்பாத்தணுமின்னு தானே நான் இம்பிட்டுத் தூரம் ஒடியாந்தேன்; எனக்கு அதுலே கவலை இருக்காதா. தெரியாதவளுக்குச் சொல்லறாப்பல ஆயிரம்தரம் எனக்குச் சொல்லணுமா! சரி; எனக்கு நேரமாவது; நான் போயித்து வாறேன்; இன்னமேயாச்சும், நான் வந்தா ஒன்னோடெ அதியாரத்தெ எல்லாம் காட்டாதே” என்று சொல்லிக் கொண்டே வாசற்படியை நோக்கி நடக்க, பொன்னம் மாளும் அவளைத் தொடர்ந்து சென்றாள்.

தான் அதிகமாகத் தாமதித்தால், தனது கல்வியர் சந்தேகம் கொள்ளுவார்கள் என்று அஞ்சிய கல்யாண மாள் உடனே எழுந்து தனது அந்தப்புரத்தை விட்டு வெளியில் க்க போஜன மாளிகையை நோக்கி விசையாக நடக்கலானான். ஆன்னலின் வெளிப்புறத்தில் தட்டியின் மறைவில் நின்ற வண்ணம், உள்புறத்தில் நிகழ்ந்த சம்பவத்தையும் சம்பாஷனையையும் முற்றிலும் நன்றாகக் கவனித்திருந்த இளநங்கையர் இருவரும் தங்களது தாய்க்கு முன் தாங்கள் போஜன மாளிகைக்குப் போய் விட வேண்டும் என்னும் நினைவைக் கொண்டவர்களாய், குறுக்கு வழியாக ஒட்டமாக ஓடி, மூவருக்கும் இலைகள் போடச் செய்து, ஒன்றையும் அறியாத் பேதைப் பெண்கள் போல இருந்து தங்களது தாயின் வருகையை எதிர்பார்த்தனர். அதன் பிறகு இரண்டு நிமிஷ நேரத்தில் கல்யாணியம்மாள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள். சயன மாளிகையில் சிறிது நேரத்திற்கு முன்னர் நடந்த அசங்கியமான சம்பவத்தைப் பற்றிய நினைவினால் அவளது மனம் பெரிதும் துன்புற்றிருந்தது எனினும், அவள் தனது துன்பத்தையும் கவலையையும் வெளியில் காட்டாமல் அடக்கிக் கொண்டு போஜன மாளிகையை அடைந்தாள். அவள் தனது முகத் தோற்றத்தை மாறுபடுத்திக் கொண்டாள். ஆனாலும், தனது புத்திரனைப் பற்றிய கவலை மிக உரமாக எழுந்து மனத்தை வதைத்தமையால், அவளது நினைவு முழுதும் வேறிடத்தில் சென்றிருந்தது. தான் மதனகோபாலனை நன்றாகத் தண்டித்தது பற்றியும், கண்மணியம்மாளைத் தண்டிக்கப் போவது பற்றியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/242&oldid=649713" இலிருந்து மீள்விக்கப்பட்டது