பக்கம்:மதன கல்யாணி-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225

தான் அடைந்திருந்த பெருங்களிப்பும் குதுகலமும் நீடித்து நிற்காத படி செய்து, தனது புத்திரனது சம்பவம் துன்பத்தை உண்டாக்கி விட்டதையும், தனக்கு மூத்த குமாரி தனது ரகசியங்களை எல்லாம் நுட்பமாக அறிந்து தன்னை ஜாடை ஜாடையாக இடித்திடித்துப் பேசுவதையும் நினைக்க நினைக்க அவளது மனம் பெரிதும் சஞ்சலமுற்றுத் தளர்வடைந்ததன்றி, தனது மூத்த புத்திரியாலும், புத்திரனாலும் இனி தனது வாழ்நாள் முழுதும் துன்பங்களுக்கு இலக்காகிக் கசந்து போகும் என்பது நிச்சயமாகப்பட்டது. அவள் மைனரது துர்க்குணத்தை நினைக்க நினைக்க, மதனகோபாலனது நற்குணமும், நன்னடத்தையும் அவளது மனதில் தோன்றி, அவளது கோபம், துயரம், வயிற்றெரிச்சல் முதலியவற்றை அதிகரிக்கச் செய்தன. மதனகோபாலனது விஷயத்தில், அக்கிரம மான கொடுமை செய்துவிட்டோமே என்ற எண்ணம் அவளது மனதில் அடிக்கடி தோன்றி மறைந்து நெஞ்சை அறுத்துக் கொண்டே இருந்தது. அதற்காகத் தன்னைத் தண்டிக்கும் பொருட்டே ஈசுவரன் தனது புத்திரன் மூலமாக இழிவையும் துன்பங்களையும் உண்டாக்கினானோ என்ற அச்சமும் கழிவிரக்க மும் கொண்டவளாய், அவள் போஜனத்தை அதிகமாக நாடாமல் உள்ளுற வருந்தியவளாய், வெளி வேஷமாக இலைக்கருகில் உட்கார்ந்து கொள்ள, இரண்டு செல்வியரும் அவ்வாறே தத்தம் இலைகளுக்கருகில் உட்கார்ந்து கொண்டனர். தாயும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் வாய் திறந்து பேசாமல் மெளனம் சாதித்தவர் களாய் இருக்க, சிறிது துரத்தில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த சமையற்காரி பக்குவ பதார்த்தங்களையும் அன்னத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வந்து பரிமாறத் தொடங்கினாள். அந்த மூன்று சீமாட்டிகளும், அதற்கு முன் போஜனம் செய்யுங் காலங்களில், சந்தோஷமாகவும் வேடிக்கையாகவும் சம்பாவித்த வண்ணம் உட்கார்ந்து போஜனம் செய்து விட்டுப் போவது வழக்கம் ஆதலால், அதற்கு மாறாக அன்றைய தினம் ஒருவரும் வாய் திறவாமலும் கவலையில் ஆழ்ந்து போயும் இருந்ததைக் கான, சமையற்காரிக்கு அது விபரீதமான காட்சியாகக் காணப் பட்டது அதனால், அன்றைய தினம் ஏதேனும் துன்பகரமான சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அவள் யூகித்துக்

மி.க.1-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/243&oldid=649715" இலிருந்து மீள்விக்கப்பட்டது