பக்கம்:மதன கல்யாணி-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மதன கல்யாணி

கவளமேனும் உண்ணவில்லை என்பதும், அவருக்கு நன்றாகத் தெரிந்தன ஆதலால், அவர் அதைப்பற்றி இரக்கங் கொண்டார் ஆனாலும், இரண்டொரு உபசார வார்த்தைகளோடு நிறுத்தி விட்டு, “சரி; எழுந்துவிட்டீர்கள்; இனிமேல் நான் எவ்வளவு தூரம் சொன்னாலும் நீங்கள் மறுபடியும் உட்கார்ந்து சாப்பிடப் போகிற தில்லை. உங்களிடம் அவசரமான ஒரு சங்கதியைப் பற்றிப் பேச வேண்டும்; உங்களுடைய அந்தப்புரத்துக்கே போய்விடு வோமா?” என்றார். கல்யாணியம்மாள், “சரி, போவோம்” என்று மறுமொழி கூறிய வண்ணம் மிகவும் சுருசுருப்பாகவும் விசையாகவும் அவருக்கு முன்னால் நடக்கலானாள். அவளது மனமோ அதிவேகமாக எங்கேயோ பறந்து சென்று எண்ணாததை எல்லாம் எண்ணித் தவித்தது. அவர் தன்னை அவ்வளவு தூரம் அவசரப்படுத்தும் படியாக நேரக்கூடிய விபரீதமான சம்பவம் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்து நினைத்து அவள் பலவித யூகங்கள் செய்து செய்து பார்க்கிறாள். எதுவும் நிச்சயமாக விளங்கவில்லை. குற்றமுள்ள மனது குறுகுறுக்கும் என்றபடி, அன்று மதனகோபாலனது விஷயத்தில் தான் செய்த தவறுகள் இருந்து தனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமோ என்றும், தான் முதல் நாள் அவனை ஆலிங்கனம் செய்து கொள்ள முயன்றதைப் பற்றி அவன் தன்மீது அவதூறான செய்தி பலரிடம் வெளியிட, அது அப்போதே சிவஞான முதலியாருக்கு எட்ட, அவர் அதன் பொருட்டு வந்திருப்பாரோ என்று அவளது சந்தேகம் முழுதும் மதனகோபாலன் மீதே சென்றது. அன்று அவள் மீனாகூஜியம் மாளோடு பல இடங்களுக்குச் சென்று மதனகோபாலனைப் பற்றிய கட்டுக்கதையைக் கூறிய பின்னர் போஷகர்களது வீடுகளுக்குச் சென்றவள், அவர்களிடத்தில் நிச்சய தாம்பூலத்தைப் பற்றி மாத்திரம் தெரிவித்து, அவர்களது சம்மதியைப் பெற்று வந்தாளே அன்றி மதனகோபாலனைப் பற்றி அவர்களிடம் எந்த விஷயமும் சொல்வது அநாவசியம் என்று நினைத்து வந்து விட்டாள். மற்றவர்களிடம் தெரிவித்தது போல அவர்களிடமும் முன் ஜாக்கிரதையாக அந்த விஷயத்தைச் சொல்லி வைக்காமல் வந்ததைப் பற்றி அவள் தனது மூடமதியை இகழ்ந்து கொண்டாள். சிவஞான முதலியார் மதனகோபாலனது விஷயத்தைக் கேட்பாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/246&oldid=649720" இலிருந்து மீள்விக்கப்பட்டது