பக்கம்:மதன கல்யாணி-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மதன கல்யாணி

மீதும், மாறி மாறி சந்தேகம் உற்றவளாய், கல்யாணியம்மாள் எவ்விதமான முடிவிற்கும் வரமாட்டாமல் தத்தளித்திருந்தாள். ஆனால், கருப்பாயி சிறிது நேரத்திற்கு முன் கூறிய வரலாற்றையும், அவள் ஆறாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு போன செய்தியையும் அவள் சிவஞான முதலியாரிடம் சொல்லாமலே இருந்து விட்டாள்.

அவ்வாறு பெட்டி வண்டி இரண்டு மயில் துரம் போக, அதன் பிறகு, அவர்கள் மைனரைத் தப்புவிக்கும் விஷயமாக ஒருவரோடு ஒருவர் பேசி ஆக்ஷேபனை சமாதானம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். அந்த வி ரங்களை எல்லாம் இப்போது கூறுவது அவசியமன்று ஆதலால், அவர்கள் ஆலந்துரை அடைந்த பிறகு நடந்த விஷயத்தை கவனிப்போம். தேனாம்பேட்டை பங்கள்ாவில் இருந்து ஒன்பதேகால் மணிக்குப் புறப்பட்ட அவர்கள் சரியாகப் பத்து மணிக்கு ஆலந்துர்ப் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தனர். ஆனால் ஸ்டேஷனுக்குச் சிறிது துரத்திற்கு அப்பால் பெட்டி வண்டி நிறுத்தப்பட்டது. கல்யாணியம்மாளை வண்டிக்குள் ளேயே உட்கார்ந்திருக்கச் செய்து, சிவஞான முதலியார் மாத்திரம் கீழே இறங்கி ஸ்டேஷனுக்குள் நடந்தார். அதற்குள் சப்இன்ஸ் பெக்டர் தமது தினசரி டைரியை எழுதிக் கொண்டிருந்தார். அவருக்குச் சமீபத்தில் ஐந்தாறு ஜெவான்கள் நின்று கொண்டிருந் தனர். திடீரென்று ஸ்டேஷனுக்குள் ஒரு மனிதர் நுழைந்ததைக் கண்ட சப் இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் திரும்பி வாசற் பக்கம் நோக்க, “நமஸ்காரம் வருகிறது; சர்க்கார் உத்தியோகஸ்தர் தமது வேலையைச் செய்யும் போது தடுக்கும் குற்றத்தை நான் இப்போது செய்து கொண்டே உள்ளே வருகிறேன். தயவு செய்து இந்தியன் பினல்கோட் 186-வது பிரிவின்படி என்மேல் குற்றம் சுமத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என்று வேடிக்கையாக இங்கிலீஷில் பேசிக் கொண்டு உள்ளே நுழைந்தார். அப்படி வந்தவர் இன்னார் என்பதை சப் இன்ஸ்பெக்டர் உணர்ந்து கொண்டார் ஆனாலும், அந்த அகால வேளையில் வந்ததிலிருந்து, அவர் ஏதோ ஒரு கேஸ் விஷயத்தில் தமது தயவை எதிர்பார்த்தே வந்திருக்கிறார் என்பதை சுலபத்தில் யூகித்துக் கொண்டவராய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/254&oldid=649739" இலிருந்து மீள்விக்கப்பட்டது