பக்கம்:மதன கல்யாணி-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237

அவருக்கும் தமக்கும் அதற்கு முன் இருந்த பழக்கத்தை அவ்வளவாகக் காட்டிக் கொள்ளாமலும், எவ்வித முகமாறுதலும் தோற்றாமலும், சந்தேகமான பார்வையாக அவரைக் கூர்ந்து நோக்கி, “ஒகோ நீங்களா! வாருங்கள்; என்ன விசேஷம்? இந்த அகாலத்தில் எங்கே இவ்வளவு தூரம் வந்தது?” என்று கேட்ட வண்ணம் திரும்பவும் கீழே குனிந்து எழுதத் தொடங்கினார். உட்கார்ந்து கொள்ளும்படி தம்மை அவர் உபசரிக்காதது பற்றி சிவஞான முதலியார் தமது மனதிற்குள் சிறிது வருந்தினார் ஆனாலும் அதை வெளியிற் காட்டிக் கொள்ளாமல், “வேறொன்று மில்லை; ஒரே ஒரு நிமிஷம் உங்களோடு தனிமையில் பேச வேண்டும். என்பது என்னுடைய வருகையால் உங்களுடைய வேலைக்குக் குந்தகம் ஏற்படுகிறதோ என்னவோ?” என்று நயமாக மறுமொழி கூறினார். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், “நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஒரு முக்கியமான கேசின் சம்பந்தமாக நான் இதுவரையில் கெட்டலைந்து விட்டு இப்போது தான் வந்து டைரியை எழுத எடுத்தேன். இதை எழுதி முடிக்க, குறைந்தது ஒரு மணியாவது பிடிக்கும். நீங்கள் என்னோடு சாவகாசமாகப் பேச வேண்டுமானால், நாளைய தினம் காலையில் வந்தால் செளகரிய மாகப் பேசலாம்” என்றார். அதைக் கேட்ட சிவஞான முதலியார் நிரம்பவும் கிலேசமடைந்தவர் போலக் காட்டிக் கொண்டு, “இல்லை இல்லை; நான் ஒரு நிமிஷத்துக்கு மேல் அதிகமாக உங்களைத் தாமதப்படுத்துவதில்லை. விஷயம் அவசரமானது ஆகையால் அதை காலை வரையில் நிறுத்தி வைக்கக் கூடாமையால் உங்களுக்குக் கொஞ்சம் சிரமம் கொடுக்க வேண்டியிருக்கிறது; ஒரே நிமிஷம்” என்று மிகவும் நயமாக மன்றாடிக் கேட்டுக் கொள்ள, சப் இன்ஸ்பெக்டர் அரை மனதோடு, “சரி; இதோ வருகிறேன்” என்று மறுமொழி கூறிய வண்ணம் தமது ஆசனத்தை விட்டு எழுந்து ஸ்டேஷனுக்கு வெளியில் இருந்த திண்ணைக்கு வர, சிவஞான முதலியாரும் பின் தொடர்ந்து அங்கே வந்து சேர்ந்தார்.

தமது வேலை முடிய வேண்டும் என்ற நினைவினால் மிகுந்த பதைபதைப்பையும் பொறுமையின்மையும் காட்டி நின்ற சப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/255&oldid=649741" இலிருந்து மீள்விக்கப்பட்டது