பக்கம்:மதன கல்யாணி-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மதன கல்யாணி

இன்ஸ்பெக்டர், “என்ன சங்கதி? சீக்கிரமாகச் சொல்லுங்கள்” என்று கேட்க, சிவஞான முதலியார் தமது சட்டைப் பையில் இருந்த சுதேசமித்திரன் பேப்பரைக் கையில் எடுத்த வண்ணம், “ஒன்றும் இல்லை; இது இன்றைய சுதேசமித்திரன் பத்திரிகை. ஒரு பெருத்த கொள்ளை நடந்ததாக ஒரு செய்தி இதில் வெளியிடப் பட்டிருக்கிறது” என்று கூறி மேலே எவ்வாறு பேசுவதென்பதைப் பற்றி யோசித்தவராய் சிறிது தயங்கினார்.

அதற்குள் சப் இன்ஸ்பெக்டர், “ஆம் ஆம். அந்தக் கொள்ளைக் கேலைப் பற்றியே நான் இன்று இவ்வளவு நேரம் அலைந்து விட்டு வந்தேன். ஏன் அந்த விஷயமாகப் பேசத்தான் நீங்கள் வந்தீர்களோ? பாலாம்பாளைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமோ?” என்றார்.

சிவஞான:- இல்லை, இல்லை; இதில் யாரோ ஒரு பையன் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறதே அந்தப் பையன் இன்னான் என்பது தெரிந்ததா?

சப் இன்ஸ்:- இல்லை. நாங்கள் நயமாகவும், பயமுறுத்தியும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், பையன் அதை மாத்திரம் வெளியிடமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறான். அவனைப் போல புகைப்படம் தயாரித்து, இரண்டு சேவகர்களிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறேன். அவன் யார் என்பதை விசாரித்து அறிந்து கொண்டு வரும்பொருட்டுப் போன அவர்கள் இன்னம் வரவில்லை.

சிவஞான:- அப்படியானால் நீங்கள் போய் அலைந்து விட்டு வந்தது பற்றி விசாரிக்க அல்லவோ?

சப் இன்ஸ்:- இல்லை. நான் மற்ற திருடர்களையும் சொத்துக் களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு போயிருந்தேன். அது இருக்கட்டும். நீங்கள் வந்த காரியம் இன்னதென்பதைத் தெரிவியுங்கள்; எனக்கு நேரமாகிறது.

சிவஞான:- அந்தப் பையன் இப்போது இங்கே தான்

இருக்கிறானா? அல்லது, அவனை சப்ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/256&oldid=649742" இலிருந்து மீள்விக்கப்பட்டது