பக்கம்:மதன கல்யாணி-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மதன கல்யாணி

அவன் நான் தேடும் பையன் தானா என்பதை நிச்சயித்துக் கொண்டு போய்விடுகிறேன். நீங்கள் சட்டப்படி உங்களுடைய கடமையை நடத்திக் கொள்ளுங்கள். நான் அதில் தலையிடுவதே இல்லை” என்றார்.

அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், “பையன் படுத்துத் துங்கிக் கொண்டிருக்கிறான். கதவுக்கு வெளியில் இருந்து பார்க்க உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன். ஆனால், அவன் நீங்கள் தேடும் பையனாய் இருந்தால், அவனுடைய பெயர், ஊர், தகப்பன் பெயர் முதலிய விவரங்களை எனக்குச் சொல்லிவிட்டுப் போக வேண்டும். அதற்கு சம்மதமானால், நீங்கள் வந்து பார்க்கலாம்” என்றார்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார், “ஆகட்டும். அப்படியே செய்கிறேன்” என்று கூறிய இணங்க, உடனே சப் இன்ஸ்பெக்டர் “சரி, வாருங்கள் காட்டுகிறேன்” என்று கூறிய வண்ணம் உள்ளே செல்ல, சிவஞான முதலியார் பின்னால் தொடர்ந்து சென்றார். சப் இன்ஸ்பெக்டர், தமது மேஜையின் மீதிருந்த ஒரு லாந்தரைக் கையில் எடுத்துக் கொண்டு மைனர் அடைப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்து, வெளிச்சத்தை உட்புறத்தில் திருப்பி நன்றாகக் காட்ட, சிவஞான முதலியார், இரும்புக் கம்பிகளான கதவிற்கு வெளியில் நின்ற வண்ணம் உட்புறத்தில் படுத்திருந்த மனிதனை உற்று நோக்கினார்; அலுத்துப் போய் நித்திரையில் ஆழ்ந்திருந்த பையனை நோக்கி சிவஞான முதலியார், அவன் மாரமங்கலம் மைனர் தான் என்பதை ஒரே விநாடியில் நிச்சயமாகக் கண்டு கொண்டார். ஆனால், அவன் இன்னான் என்பதை அப்போது வெளியிடுதல் கூடாதென உறுதி செய்து கொண்டவராய், அவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நோக்கி, “சரி; நான் உங்களுக்கு வீணில் இவ்வளவு தூரம் சிரமம் கொடுத்ததன்றி, உங்களுடைய எழுத்து வேலைக்கும் தடை செய்து விட்டேன். இவன் நான் தேடி வந்த பையனல்ல. தயவு செய்து மன்னிக்க வேண்டும்; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன்” என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். சிறிதும் சந்தேகிப்பதற்கு இடங் கொடாமல் முதலியார் மிகவும் தந்திரமாக நடந்து கொண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/258&oldid=649746" இலிருந்து மீள்விக்கப்பட்டது