பக்கம்:மதன கல்யாணி-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249

பதுங்கிக் கொண்டான் ஆதலால் அவன் இருந்ததை அதன் பிறகு எவரும் கவனிக்க சந்தர்ப்பம் ஏற்படாதிருந்தது. திருடர்கள் உள்ளே நுழைந்து விளக்கைக் கொளுத்தியது முதல், அங்கிருந்த பொருள் களை எல்லாம் எடுத்துக் கொண்டு போனது வரையில், பாலாம் பாள் திருடர்களோடு போராடிக் கொண்டிருக்க நேர்ந்தது ஆகையால், அவளுக்கு அதுவரையில் மைனரைப் பற்றிய நினைவே ஏற்படவில்லை. திருடர்கள் ஒடிய போது வெளியில் மோட்டார் வண்டி வந்து நின்ற ஓசை உண்டாகவே, நாடகத் தலைவர் ஆள்களோடு வந்திருக்க வேண்டும் என்ற நினைவு பாலாம்பாளது மனத்தில் உண்டாயிற்று. ஜன்னலில் கட்டுப்பட் டிருந்தபடியே அவள் நாற்புறங்களிலும் திரும்பி நோக்கி, மைனர் இருக்கிறானோ என்பதை கவனித்தாள், திருடர்கள் வெளியிற் சென்ற பின்னரும், அவன் எவ்வித ஓசையும் செய்யாமல் படுத்திருந்தான் ஆதலால், அந்த அறைக்குள் அவன் இல்லை என்றும், திருடர்கள் கதவைத் திறந்த உடனே அவன் தப்பித்து வாசல் வழியாக வெளியில் ஒடிப் போயிருக்க வேண்டும் என்றும் உறுதியாக எண்ணிக் கொண்டாள். சிறிது நேரத்தில், நாடகத் தலைவரான கிழவரும், போலீஸாரும் உள்ளே துழைந்து, அவளது கட்டுகளை அவிழ்த்து விட்டபோது, மைனர் அவ்விட்த்தில் இல்லை என்னும் நினைவினாலேயே, அவள் கிழவரிடம் ஒடி, “அப்பாடா” என்று ஆவலோடு அவரைக் கட்டிக் கொண்டாள். மைனர் பத்திரம் எழுதிக் கொடுத்த காலத்தில், மறுநாள் முதல் கிழவரது தொடர்பை விலக்கிவிட வேண்டும் என்ற உறுதியை அவள் கொண்டிருந்தாள் என்பது முன்னரே சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், அந்த மகா ஆபத்தான நிலைமையில் அந்தக் கிழவரை அலட்சியம் செய்வது உசிதமாக அவளுக்குத் தோன்றவில்லை. ஏனெனில், தனது பொருட்டு அவர் அந்த அகாலத்தில் மோட்டார் வண்டி அமர்த்திக் கொண்டு போலீஸா ரோடு வந்து தன்னை அவிழ்த்து விட்டதுமன்றி, அன்று இரவு முழுதும் அவர் தன்னைக் காப்பாற்ற வேண்டுவது முக்கியமான தாக இருந்தது. அதுவும் நிற்க, தன்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் திருடர்கள் துடைத்துக் கொண்டு, தன்னை ஒட்டாண்டி ஆக்கிப் போய்விட்டனர். ஆதலால் அந்த நிலைமையில், முன்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/267&oldid=649768" இலிருந்து மீள்விக்கப்பட்டது