பக்கம்:மதன கல்யாணி-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9

என்ற ஜாதிகளுள் அவள் எதில் சேர்ந்தவள் என்பதை நான் உடனே சொல்லி விடுவேன். ஆண்பிள்ளைகளுடைய ஜாதியைக் கண்டுபிடிக்க என்னால் ஆகுமோ” என்றான்.

அதைக் கேட்ட மைனர் குலுங்கக் குலுங்க நகைத்து “இவ்வளவு தானா உன் சாமர்த்தியம்! இதற்கு முன் இவனைப்பற்றி நான் விசாரித்ததில்லை. இருந்தாலும், இவன் ஒரு தாசியின் மகனாய்த் தான் இருக்க வேண்டும். அதனாலே தான் வீணை வாசிப்பதில் இவ்வளவு திறமை இருப்பதோடு, உடம்பும் உருளைக்கிழங்கு போல மொழுமொழு என்று இருக்கிறது. இவனுடைய முகக் களையும் முகவெட்டும் பெண் பிள்ளையினுடையதைப் போலவே இருக்கின்றன. அதனாலே தான் இவனை முதலில் பார்த்த அன்றைக்கே நான் ஆக்ஷேபித்தேன். என்னுடைய தங்கைகள் இருவருக்கும் இவன் வீணை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் அம்மாளோடு நேற்று சாயங்காலம்கூட சண்டை போட்டேன். இவன் இங்கேயும் வந்து கண்மணிக்கு வீணை கற்றுக் கொடுப்பது எனக்குக் கொஞ்சமும் சம்மதமாக இல்லை. எப்படியாவது அத்தையம்மாளிடம் சொல்லி இவன் வரு வதை நிறுத்திவிடு. வினை வாசிக்காவிட்டாலும், கண்மணியை நான் கண்மணியாகவே பாவிப்பேன் என்பது உனக்குத் தெரியாதா?” என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா சந்தோஷப் பார்வையாக மைனரை நோக்கி, “அப்படியே செய்யலாம்; அதிருக்கட்டும், மாப்பிள்ளை’ கையில் செலவுக்கு ஒரு காசுகூட இல்லை. எங்கே போனாலும் கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்கள். பெரியப்பன் மாதாமாதம் எனக்கு அனுப்பும் ஐந்நூறு ரூபாய் ஐந்தே நாளைக்கு வருகிறது. அத்தையம்மாள் கொடுப்பது அடுத்த நாளே போய்விடுகிறது. ஒவ்வொரு மாசமும் பணத் தொல்லையே பெரிய தொல்லை யாகப் போய்விட்டது. இப்போது எனக்கு மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் வரையில் கடன் இருக்கிறது. இந்தச் சமயம் நீதான் என்னுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றான்.

மைனர்:- இப்போது பங்களாவை விட்டு வரும் போதுகூட எனக்கும் என்னுடைய அம்மாளுக்கும் பெருத்த சண்டை நடந்தது. பணம் கேட்டால் அவள் கொடுக்கிறதே இல்லை. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/27&oldid=649774" இலிருந்து மீள்விக்கப்பட்டது