பக்கம்:மதன கல்யாணி-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253

திடுக்கிட்டு நடுநடுங்கி, ஒருகால் அன்று இரவிலும் திருடன் வந்து விட்டானோ என்ற நினைவும், பேரச்சமும் பெருந் திகிலும் அடைந்து, “யார் அங்கே?” என்று மெதுவாகக் கேட்க, வேலைக் காரன் யாரோ சில பெரிய மனிதர் வெளியில் நின்றதாகவும், ஒர் அவசரமான விஷயத்தின் பொருட்டு தங்களைப் பார்க்க விரும்புவ தாகவும் கூறவே, அவளது பெருத்த பீதி சிறிது தணிந்தது ஆனாலும், அவர்கள் யாராயிருப்பார்கள் என்ற சிந்தனையும், அதனால் தனக்கு ஏதேனும் துன்பம் நேருமோ என்ற அச்சமும், அவர்கள் தன்னிடம் என்ன விஷயத்தின் பொருட்டு வந்திருப்பார் களோ என்ற ஐயமும் எழுந்து அவளது மனத்தை உலப்ப ஆரம் பித்தன. மைனரது விஷயத்தில் எவ்வித முடிவிற்கும் தான் வரமாட் டாமல் சஞ்சலமடைந்து தவித்திருந்த அந்தத் துன்பகரமான நிலைமையில் இன்னம் என்னென்ன துன்பங்கள் வந்து நேருமோ என்ற கவலை கொண்டிருந்தாள். தேனாம்பேட்டையில் இருந்து ஒரு ஜெமீந்தாரியம்மாளும் மைலாப்பூர் வக்கீல் ஒருவரும் வந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்கவே, அவளது சந்தேகம் உடனே நீங்கியது. அவர்கள் மாரமங்கலம் மைனரைச் சேர்ந்தவர்கள் என்று அவள் உடனே யூகித்துக் கொண்டாள். தான் மைனரை விலக்கலாமா, அல்லது, கிழவரை விலக்கலாமா என்பதைப் பற்றி எவ்வித முடிவிற்கும் வரமாட்டாமல் இருந்த தருணத்தில் அவர்களது வருகை, அந்த விஷயத்தை தான் ஒரு வகையாகத் தீர்மானிப்பதற்கு அனுகூலமாக இருக்கும் என்ற நினைவைக் கொண்டவளாய், அவர்களை அழைத்து வரும்படி சொல்லி அனுப்பிவிட்டு, கதவின் தாளை மாத்திரம் விலக்கியபடி கதவை மூடிய வண்ணம் வைத்து விட்டு ஒரு பெருத்த சால்வையால் கழுத்து வரையில் மூடிக்கொண்டு, நோயாளி போலக் கட்டிலில் படுத்திருந்தாள். அவ்வாறு 10-நிமிஷ நேரம் கழிந்தது. பாலாம்பாளது மனதில் ஆவல் அபாரமாகப் பெருகிக் கொண்டிருந்த தருணத்தில், கையில் லாந்தரோடு முதலில் வந்த வேலைக்காரன், “இப்படி உள்ளே வாருங்கள். அம்மாள் இதோ கட்டிலில் படுத்திருக்கிறார்கள்” என்று பின்புறம் திரும்பி உபசரிக்க, சிவஞான முதலியார் முன்னும், கல்யாணியம்மாள் பின்னுமாக, மிகுந்த லஜ்ஜை அடைந்தவளாய், அந்தச் சயன அறைக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/271&oldid=649778" இலிருந்து மீள்விக்கப்பட்டது